நிலாவை கடுப்பேற்ற வேறொரு பெண்ணை காதலித்த சோழன்.. ஆனால், காத்திருந்த அதிர்ச்சி! அய்யனார் துணை சீரியல் புரோமோ
அய்யனார் துணை
மக்களிடம் வரவேற்பை பெற்று வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் சீரியல் அய்யனார் துணை. இந்த சீரியலில் கடந்த வாரம் சேரனின் நிச்சயதார்த்தம் நின்றுபோன நிலையில், அனீஷ் தனது தங்கை சந்தாவை திருமணம் செய்துகொள்வீர்களா என சேரனிடம் கேட்டார்.

சேரனுக்கும் வெட்கப்பட்டுக்கொண்டே வீட்டிற்கு வந்தார். நிச்சயதார்த்தம் நின்றுபோன வருத்தம் கொஞ்சம் கூட இல்லாமல், அண்ணன் ஏன் இப்படி வெட்கப்பட்டு கொண்டே இருக்கிறார் என தெரியாமல் தம்பிகள் அனைவரும் இருந்தனர். இதற்கு காரணம் சந்தாவை சேரனுக்கு பிடித்துப்போனதுதான் என தெரிந்தவுடன் குடும்பத்தில் உள்ள அனைவரும் மகிழ்ச்சியடைந்தனர்.

புரோமோ வீடியோ
இந்த நிலையில், வரும் வாரத்தின் புரோமோ வீடியோ வெளியாகியுள்ளது. நிலாவை வெறுப்பேத்துவதற்காக வேறொரு பெண்ணை காதலிப்பது போல் நடித்தார் சோழன். இதனால் நிலா கொஞ்சம் கடுப்பானார். அதை அப்படியே தொடர்ந்து செய்து வந்தார். ஆனால், தற்போது அதுவே அவருக்கு வினையாக மாறிவிட்டது.

அந்த பெண்ணின் பிறந்தநாளுக்கு செல்லும் சோழன், அவள் தன்னை உண்மையாக விரும்புவதை தெரிந்துகொள்கிறார். தான் ஏதோ விளையாட்டிற்காக செய்தது, தற்போது இவ்வளவு சீரியஸாக மாறிவிட்டது என ஷாக்காகி நிற்கிறார் சோழன். இதன்பின் என்ன நடக்கப்போகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.