வீட்டைவிட்டு வெளியே சென்ற பல்லவன், பதறிய அண்ணன்கள், ஆனால் நிலா செய்த காரியம்... அய்யனார் துணை எபிசோட்
அய்யனார் துணை
அடடே, ஆஹா ஓஹோ என ரசிகர்கள் கொண்டாடும் அளவிற்கு தரமான எதார்த்தமான கதைக்களத்துடன் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் அய்யனார் துணை.
சீரியலின் பெயர்கள் தொடங்கி சேரன், சோழன், பாண்டியன், பல்லவன் என முக்கிய கதாபாத்திர பெயர்கள் வரை மக்களை ரசிக்க வைத்துள்ளன. இப்போது கதையில் ஒரு பல வருட ரகசியம் வெளியாகியுள்ளது.

அதாவது பல்லவன் யார், அவரது பெற்றோர்கள் என்பதை நடேசன் நிலாவிடம் மொத்தம் கூறுகிறார், அதோடு ரகசியத்தை யாரிடமும் சொல்ல வேண்டாம் எனவும் கூறுகிறார். ஆனால் நடேசன் சொன்ன உண்மையை சேரன் கேட்டுவிடுகிறார், அவரும் நான் யாரிடமும் சொல்ல மாட்டேன் என்கிறார்.
காருக்குள் ஏற்பட்ட சண்டை, அடிதடி, மருத்துவமனையில் அனுமதிக்கட்டாரா பிக்பாஸ் 9 பிரபலம்... ஷாக்கிங் தகவல்
எபிசோட்
இன்றைய எபிசோடில், நடேசனை இறந்து போ என பல்லவன் கூறியதை கேட்டு ஆத்திரத்தில் நிலா அவனை அடித்துவிடுகிறார். இதுதான் உன் கல்லூரியில் சொல்லிக் கொடுக்கிறார்களா, என்ன பேச்சு இது என கோபமாக திட்டுகிறார்.

என்னை அடிச்சிட்டீங்கள, இனி இந்த வீட்டில் இருக்க மாட்டேன் என வெளியே செல்கிறார். அண்ணன்கள் அவனை தடுக்க செல்ல நிலா அனைவரையும் வீட்டில் இருக்க கூறிவிட்டார். ஆனால் மனம் தாங்காத நடேசன் பல்லவனை தேடிச்செல்ல அவர் பஸ் ஸ்டான்டில் உட்கார்ந்து கொண்டிருக்கிறார்.
பல்லவன் வீட்டிற்கு கிளம்பும் வரை அங்கேயே அமர்ந்துகொண்டிருக்கிறார் நடேசன்.

சோழன் போன் செய்து பல்லவனை அழைத்தால் வர மாட்டேன் என்றவர் நிலா என் மீது பாசம் இருந்தால் வீட்டிற்கு வா, எனக்கு உன்னை அடிக்க உரிமை உள்ளது என்று நினைத்தால் வா, உரிமை இல்லை என்றால் மன்னிப்பு கேட்டுவிட்டு நான் இங்கிருந்து செல்கிறேன் என்கிறார்.
உடனே பல்லவன் இல்லை உரிமை உள்ளது என கூறி வீட்டிற்கு வருகிறார்.
30 நொடிகளில் தப்ப முயன்ற 200 பேர்... சுவிட்சர்லாந்தை உலுக்கிய கோர சம்பவத்தின் பகீர் பின்னணி News Lankasri