சண்டை போட்ட வானதி, சோழன் மீது சாய்ந்து கதறி அழுத நிலா... அய்யனார் துணை சீரியல் எபிசோட்

By Yathrika Mar 17, 2026 12:10 PM GMT
Report

அய்யனார் துணை

அடடே குடும்பம் என்றால் இப்படி தான் இருக்க வேண்டும் என ரசிகர்கள் கொண்டாடும் அளவு தரமான கதைக்களத்துடன் ஒளிபரப்பாகி வருகிறது அய்யனார் துணை.

இப்போது கதையில் நிலா புதிய கம்பெனிக்கு பார்ட்னர் ஆகும் கதைக்களம் ஹைலைட்டாக ஒளிபரப்பாகிறது. அதேபோல் வானதியுடன் எப்போதும் சண்டை வந்துகொண்டே இருப்பதால் நிலா பாண்டியிடம் அவரை வெளியே எங்கேயாவது அழைத்து செல்லுங்கள் என கூற அப்படியே அவரும் செய்கிறார்.

சண்டை போட்ட வானதி, சோழன் மீது சாய்ந்து கதறி அழுத நிலா... அய்யனார் துணை சீரியல் எபிசோட் | Ayyanar Thunai Serial March 17 Episode

அதேபோல் தவறு செய்து அதில் பாடம் கற்றுக்கொண்ட பல்லவன் அண்ணன்கள் பேசாததால் வீட்டிலேயே முடங்கியுள்ளார்.

க்ரிஷை வைத்த ரோஹினி போட்ட அடுத்த பிளான், அவமானப்பட்ட மனோஜ்... சிறகடிக்க ஆசை சீரியல்

க்ரிஷை வைத்த ரோஹினி போட்ட அடுத்த பிளான், அவமானப்பட்ட மனோஜ்... சிறகடிக்க ஆசை சீரியல்

எபிசோட் 

இன்றைய எபிசோடில், சேரன்-சந்தா காட்சியோடு ஆரம்பிக்கிறது. சந்தா கல்லை தூக்கி வேலை செய்ய அதைப்பார்த்த சேரன் மிகவும் அக்கறையோடு இந்த வேலை எல்லாம் நீ செய்ய வேண்டாம், நான் பார்த்துக் கொள்கிறேன் என அவரை உட்கார வைக்கிறார்.

சண்டை போட்ட வானதி, சோழன் மீது சாய்ந்து கதறி அழுத நிலா... அய்யனார் துணை சீரியல் எபிசோட் | Ayyanar Thunai Serial March 17 Episode

அடுத்து பாண்டி-வானதி வெளியே சென்றுள்ள காட்சிகள் இடம்பெறுகின்றன. முதலில் கோவில் அடுத்து சினிமா சென்றவர்கள் சாப்பிட ஒரு ஹோட்டல் செல்கிறார்கள். அங்கு சந்தோஷமாக பேசிக்கொண்டிருந்த வானதி இந்த ஐடியா எப்படி வந்தது என கேட்டதும் நிலா சொன்னார் என பாண்டி கூற உடனே கோபப்படுகிறார்.

பின் பாண்டி பொறுமையாக வானதியிடம் என் வீட்டில் இருப்பவர்களை எப்போதும் தவறாக நினைக்காதே அவர்கள் அனைவருமே உன் மீது அக்கறையாக தான் உள்ளார்கள் என புரிய வைக்கிறார்.

சண்டை போட்ட வானதி, சோழன் மீது சாய்ந்து கதறி அழுத நிலா... அய்யனார் துணை சீரியல் எபிசோட் | Ayyanar Thunai Serial March 17 Episode

கடைசியாக நிலா தோழிகளுடன் தொடங்கவுள்ள புதிய கம்பெனி பூஜைக்கு செல்கிறார். அங்கு தோழியின் கணவர் பணமே போடாமல் பார்ட்னா என கொஞ்சம் ஏளனமாக பேச வெளியே வந்து சோழன் மீது சாய்ந்து கதறி கதறி அழுகிறார்.

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US