சேரனை தாண்டி தம்பிகளுக்கு தெரியவந்த அம்மா பற்றிய உறவு... அய்யனார் துணை சீரியல் எபிசோட்
அய்யனார் துணை
அண்ணன்-தம்பிகள் என்றால் இப்படி இருக்க வேண்டும் என பார்ப்போரை ரசிக்க வைக்கும் ஒரு சீரியலாக உள்ளது அய்யனார் துணை.
சேரன் மற்றும் தம்பிகள் முதன்முறையாக தங்களது குலதெய்வம் எங்கே உள்ளது என தெரிந்து அங்கு சென்றுள்ளனர். கடந்த எபிசோடுகள் குலதெய்வ கோவில் காட்சிகள் தான் ஒளிபரப்பாகி இருந்தது.
இப்போது அனைவரும் சென்னைக்கு கிளம்ப உள்ளனர், இடையில் வானதி கிளப்பிய பிரச்சனையால் சேரனிடம் அடிவாங்கிக்கொண்டு என்ன தான் நடக்கிறது என்ற குழப்பத்தில் பாண்டியன் உள்ளார்.

எபிசோட்
இன்றைய எபிசோடில், அனைவரும் சென்னைக்கு கிளம்ப தயாராகி வரும் நேரத்தில் வீட்டிற்கு வந்து ஒருவர் நடேசனை தாக்குகிறார். அவர் யார் என்று பார்த்தால் நடேசன் கொலை செய்துவிட்டதாக கூறப்படும் அவரது மனைவியின் அண்ணன்.

எனது தங்கையை கொன்ற நீ இந்த ஊருக்கு வரக்கூடாது என்றேனே எப்படி இங்கே வந்தாய் என சண்டை போடுகிறார்.
சேரனை தாண்டி அவர் யார் என தெரியாத தம்பிகளுக்கு மாமா என்ற விஷயம் தெரிந்தும் சந்தோஷப்படாமல் சண்டை போட்டு கொள்கிறார்கள். சேரன் தலையிட்டு ஒருவழியாக அவர்களை விலகிவிடுகிறார்.

பின் சோழனை அவரது மாமா சரமாரியாக அடித்துவிட நிலா அவருக்கு முதலுதவியும் செய்கிறார். இப்படியே இன்றைய எபிசோடும் முடிவுக்கு வருகிறது.