கோவிலில் சேரன், சோழன் சொல்ல சொல்ல நிலா செய்த காரியம், சோகத்தில் குடும்பம்... அய்யனார் துணை சீரியல்
அய்யனார் துணை
அய்யனார் துணை, தமிழ் சின்னத்திரையில் புதியதாக தொடங்கப்பட்ட சீரியல்களில் ரசிகர்களால் கொண்டாடப்படும் ஒரு தொடர்.
வழக்கமான கதைக்களமாக இல்லாமல் கொஞ்சம் வித்தியாசத்தை கொண்டது, அண்ணன்-தம்பிகளின் பாசத்தை அழகாக காட்டிக்கொண்டிருக்கிறது இந்த சீரியல்.
இன்றைய எபிசோட் கதையில், கோவிலில் சேரன் அத்தை வழக்கம் போல் அது பெண்கள் இல்லாத வீடு, அவனுங்க எங்க உருப்பட போறானுங்க, அவனுங்களுக்கு நல்லதே நடக்காது.
அவனுங்களுக்காக சாதி கும்பிட யாரும் இல்லை என கூற நிலா நான் இருக்கிறேன், எனது குடும்பத்திற்காக நான் பரிகாரம் செய்கிறேன் என்கிறார்.
பின் தீச்சட்டி எடுப்பது தான் பரிகாரம் என கூற நிலா செம ஷாக் ஆகிறார், மற்றவர்களும் இந்த பரிகாரம் வேண்டாம் என்கின்றனர்.
நிலாவும் எல்லோரும் என்னை மன்னித்து விடுங்கள், கோவிலில் நான் செய்கிறேன் என கூறிவிட்டு இப்போது முடியாது என கூறுவதற்கு மன்னித்து விடுங்கள். தீச்சட்டி எல்லாம் நான் செய்தது இல்லை என்கிறார்.
போட்டோ
இன்றைய எபிசோடில் நிலா முடியாது என்பது போல் காட்டப்பட்டது. ஆனால் அவர் பிறகு மனம் மாறி தீச்சட்டி எடுக்க ஒப்புக்கொண்டுள்ளார். அவர் தீச்சட்டி எடுக்கும் படப்பிடிப்பு தள புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது.
நிலா கையில் தீச்சட்டி எடுத்துச் செல்ல சேரன், சோழன் சோகமாக காணப்படுகிறார்கள்.