பாக்கியலட்சுமி சீரியல் புகழ் திவ்யா உடல் எடையை குறைக்க என்ன டயட்டில் இருக்கிறார் தெரியுமா?
பாக்கியலட்சுமி சீரியல்
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சீரியல்களில் டாப்பில் இருக்கும் தொடர் பாக்கியலட்சுமி. இந்த தொடரில் கோபி பாக்கியாவை விவாகரத்து செய்ததில் இருந்து கதைக்களம் விறுவிறுப்பாக ஓடிக் கொண்டிருக்கிறது.
இப்போது பாக்கியா, கோபியிடம் வீட்டிற்கான ரூ. 18 லட்சம் மீதி பணத்தை ஒரு மாதத்தில் கொடுத்து விடுவதாக தெரிவித்திருக்கிறார்.
அதற்காக ஒரு பெரிய கான்ட்ராக்ட் எடுத்து பாக்கியா சமைத்து வருகிறார்.

திவ்யா டயட்
இந்த தொடரில் ஜெனி என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் திவ்யா. இவர் உடல் எடையை பிட்டாக வைத்துக்கொள்ள என்ன டயட்டில் இருக்கிறார் என்பதை பார்ப்போம்.
காலை 4-6 மணிக்குள் ஜிம் சென்று முடிந்த வரை வொர்க்கவுட்ஸ் செய்வாராம்.
ஈஸியான கார்டியா பயிற்சி தான் திவ்யாவின் வழக்கமான வொர்க்கவுட்ஸ். டயட் பிஸ்கட், டயட் ரைஸ் போன்ற டயட்டுக்கு ஏற்றார் போலவே உணவுகளை எடுத்து கொள்வாராம்.

அதிகளவில் சமைக்காத பச்சை உணவுகளையும் டயட்டில் சேர்த்து கொண்டாராம். முக அழகிற்காக வைட்டமின் சி உணவுகளை அதிகம் எடுப்பாராம். நீர்ச்சத்து அதிகம் தேவை என்பதால் இளநீர், தர்பூசணி ஜுஸ், பழங்களை தினமும் உண்பாராம்.
சரும விஷயத்திலும் சரி இதுவரை ஹோம்மெட், ஹெர்பல் தவிர எந்தவித கெமிக்கல் பொருட்களையும் திவ்யா கணேஷ் முகத்தில் டிரை செய்தது இல்லையாம்.

எதிர்நீச்சல் சீரியல் இயக்குனர் திருச்செல்வம் மனைவியை பார்த்துள்ளீர்களா?- இதோ பாருங்கள்
அதிகரிக்கும் சுவாசத் தொற்று.., மருத்துவமனைக்கு வரும் மக்கள் முகக்கவசம் அணிய அறிவுறுத்தல் IBC Tamilnadu
சூப்பர் எல் நினோவால் கதிகலங்கப் போகும் அவுஸ்திரேலியா... நூற்றுக்கணக்கானோர் இறக்கக்கூடும் News Lankasri