பள்ளியில் இன்னும் எத்தனை பேரை காதலிப்பீர்கள்- Trollகளுக்கு பாக்கியலட்சுமி சீரியல் இனியா கொடுத்த பதிலடி
பாக்கியலட்சுமி சீரியல்
படங்களை விட தொடர்களை பார்ப்பவர்கள் அதிகமாகிவிட்டார்கள். இதனால் எல்லா தொலைக்காட்சியிலும் நிறைய புத்தம் புதிய சீரியல்களாக ஒளிபரப்பாகி வருகின்றனர்.
தமிழ் சின்னத்திரையில் டாப் சீரியல்கள் லிஸ்ட் எடுத்தால் அதில் முதல் டாப் 5 இடங்களில் விஜய் தொலைக்காட்சியின் பாக்கியலட்சுமி சீரியல் வந்துவிடும்.
இந்த அளவிற்கு இந்த தொடர் வாரா வாரம் விறுவிறுப்பான கதைக்களத்துடன் ஓடிக் கொண்டிருக்கிறது.
இப்போது பாக்கியா எப்படி கோபியின் ரூ. 20 லட்சத்தை கொடுக்கப்போகிறார் என்பது தான் அடுத்து கதையின் கதைக்களமாக இருக்கப்போகிறது.
நேஹா கொடுத்த பதிலடி
இப்போது தொடரில் இனியா தன்னுடன் டியூஷனில் உடன் படிக்கும் சரண் என்பவருடன் கடலை போட ஆரம்பித்துள்ளார். இந்த காட்சிகளை பார்த்த ரசிகர்கள் பள்ளியில் மட்டுமே இன்னும் எத்தனை பேரை காதல் செய்வாய் என நிறைய மோசமாக கமெண்ட் செய்கிறார்களாம்.
அந்த கமெண்ட்டுகளுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் நேஹா தனது இன்ஸ்டா பக்கத்தில், 12th பசங்க இப்போ லவ் எல்லாம் பண்ணாம தான் இருக்காங்களோ ?படங்களில் ஸ்கூல் பெண் காதலித்தால் உங்களுக்கு ஓகே, ஆனால் சீரியலில் காண்பித்தால் நீங்கள் குழந்தைகளை தவறாக வழி நடத்துகிறீர்கள் என்று சொல்றீங்க.
ஏன்டா ஏன். மேலும், இது எல்லாம் கதாபாத்திரம் தான் உண்மை ஒன்றும் கிடையாது, நீங்கள் பார்க்கும் விஷயங்களுக்காக எங்களுக்கு சம்பளம் கொடுக்கப்படுகிறது என்று கூறியுள்ளார்.
பெற்றோர்கள், சகோதர, சகோதரிகள் என மொத்த குடும்பத்துடன் புகைப்படம் எடுத்த தனுஷ்- லேட்டஸ்ட் க்ளிக்