ரஜினியின் முக்கிய படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்துள்ள பாக்கியலட்சுமி சீரியல் நடிகை- என்ன படம் தெரியுமா?
பாக்கியலட்சுமி
தமிழ் சின்னத்திரையின் டாப் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி.
விஜய் தொலைக்காட்சியில் இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகும் இந்த தொடர் புதுமுகங்கள் பலர் வைத்து எடுக்கப்பட தொடங்கியது, ஆனால் இப்போது எல்லோருமே பரீட்சயமானவர்களாக ஆகிவிட்டனர்.
அண்மையில் இந்த தொடரில் எழில் வேடத்தில் நடித்து பல ரசிகர்கள் வட்டாரத்தை பெற்ற விஷால் சில காரணங்களால் தொடரில் இருந்து விலகிவிட்டார். அவரின் இந்த முடிவு ரசிகைகளுக்கு கடும் அதிர்ச்சியை கொடுத்தது என்றே கூறலாம்.
ராஜலட்சுமி ஓபன் டாக்
இந்த தொடரில் கோபியின் அம்மாவாக ஈஸ்வரி கதாபாத்திரத்தில் நடிக்கும் நடிகை ராஜலட்சுமி ஒரு பேட்டி கொடுத்துள்ளார்.
அதில் அவர் பேசும்போது, நான் மூன்று முகம் திரைப்படத்தில் ரஜினி நடித்த அலெக்சாண்டர் வேடத்தில் அவருக்கு ஜோடியாக நடித்தேன். அவர் ரொம்பவே எளிமையான நபர், இந்த படம் 1982ம் ஆண்டு வெளிவந்தது.
ஆனால் அப்போது இருந்தது போல தான் இப்போதும் ரஜினி இருக்கிறார். சில வருடங்களுக்கு முன்பு அவரை சந்தித்தேன், பழையது போலவே எளிமையாக பேசிக்கொண்டிருந்தார், எனக்கு வியப்பாக இருந்தது.
பழையது போலவே யாருக்கும் தெரியாமல் அதிகமான உதவி செய்து கொண்டிருக்கிறார்.
அதனாலேயே அவர் ஆரோக்கியத்தோடு நீண்ட நாட்கள் வாழ வேண்டும் என்று நான் அவருடைய ரசிகர்கள் போலவே வேண்டிக்கொள்கிறேன் என பேசியுள்ளார்.