பாக்கியலட்சுமி சீரியல் புகழ் கோபி வேறொரு தொடரில் கமிட்டானாரா?- எந்த தொடர் தெரியுமா?
பாக்கியலட்சுமி தொடர்
விஜய் தொலைக்காட்சியை டாப் ரேட்டிங் வர காரணமாக இருக்கும் ஒரு தொடர் பாக்கியலட்சுமி.
இந்த தொடருக்கு மக்கள் மத்தியில் பெரிய ரெஸ்பான்ஸ் உள்ளது, ஒரு பெண் கணவனால் கைவிடப்பட்டாலும் எல்லா பிரச்சனைகளையும் சந்தித்துக்கொண்டே எப்படி முன்னேறுகிறார் என்பதை காட்டுகிறது.
பாக்கியாவை கைவிட்ட அந்த ஆண் இப்போது அவரை ஏன் விட்டோம் என புலம்பும் அளவிற்கு கதைக்களம் சென்றுகொண்டிருக்கிறது.
அடுத்த என்ன நடக்கப்போகிறது, கோபி எப்படியெல்லாம் பார்த்து புலம்ப போகிறார் என்பதை காண மக்கள் ஆர்வமாக உள்ளனர்.
புதிய தொடர்
இந்த நிலையில் கோபி என்கிற சதீஷ் தனது இன்ஸ்டாவில் இனி பாக்கியலட்சுமி தொடரில் அவ்வளவாக நான் வரப்போவதில்லை, புதியதாக வந்திருக்கும் ரஞ்சித் அவர்களுக்கு ஆதரவு கொடுங்கள் என வீடியோ வெளியிட ரசிகர்கள் பதறினார்கள்.
இந்நிலையில் நடிகர் சதீஷ் மலையாளத்தில் ஒரு தொடர் நடிக்க கமிட்டாகி இருப்பதாகவும், தற்போது கேரளாவில் அவர் தங்கியிருப்பதாகவும் கூறப்படுகிறது.
நடிகைகள் அம்பிகா மற்றும் ராதாவின் சகோதரியை பார்த்தீர்களா?- வைரலாகும் லேட்டஸ்ட் க்ளிக்