என்னை அழிக்க சில பேர் காத்திருக்கிறார்கள்.. பாக்கியலட்சுமி நடிகர் சதீஷ் அதிர்ச்சி பதிவு
கோபி
விஜய் டிவியின் பாக்கியலட்சுமி சீரியலில் கோபி ரோலில் நடித்து வருகிறார் சதீஷ். தற்போது முழு வில்லனாக அவரது ரோல் மாற்றப்பட்டு இருக்கிறது.
தன்னை அழிக்க சில பேர் காத்துக்கொண்டிருப்பதாக கோபி தற்போது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு இருக்கிறார்.
அழிப்பதற்கு காத்து கொண்டிருப்பார்கள்..
தான் நடித்த மலையாள சீரியல் வீடியோ ஒன்றை பதிவிட்டு, ஆதங்கத்துடன் சதீஷ் பேசி இருக்கிறார்.
"நான் மிகவும் ஆசையுடனும், பெரும் எதிர்பார்ப்புடன் நடிக்க ஒத்து கொண்ட ரோல். ஆனால் எதிர்பார்ப்புகள் பெரும் ஏமாற்றத்தில் தான் முடியும் என்பதை வாழ்க்கை எனக்கு மீண்டும் பாடம் கற்பித்தது. "
"நாம் என்ன தான் சிறப்பாக செயல் செய்தாலும், அதை அழிப்பதற்கு சில பேர் காத்து கொண்டிருப்பார்கள். நண்பர்களே, இது தான் உண்மை. வாழ்க்கை தத்துவம்" என அவர் கூறி இருக்கிறார்.