மகளை காட்டமுடியாது என அசிங்கப்படுத்திய கோபி.. பாக்கியலட்சுமி நாளைய ப்ரோமோ
பாக்கியலட்சுமி சீரியலில் தற்போது மகள் இனியா கோபி உடன் வந்து தங்கி இருக்கிறார். அங்கிருந்தே அவர் பள்ளிக்கு சென்று வரும் நிலையில் தற்போது அவர் பிக்னிக் சென்ற பள்ளி வாகனம் விபத்தில் சிக்குகிறது.
கதறி அழும் பாக்யா
அந்த விஷயம் கோபி மற்றும் பாக்யா இருவருக்குமே தெரியவந்து பள்ளிக்கு வேகமாக செல்கிறார்கள். அங்கு முதலில் செல்லும் கோபி இனியாவை பார்த்து அழைத்து வருகிறார். பாக்யாவும் வந்திருப்பதை கவனித்து அவர் தந்திரமாக வேறொரு பக்கம் இனியாவை அழைத்துக்கொண்டு காரில் சென்றுவிடுகிறார்.
பாக்யா மகளை பார்க்க நினைத்து அங்கு வருவதற்குள் கோபி சென்றுவிட, பாக்யா கதறி கதறி அழுகிறார்.
மகளை காட்டமுடியாது..
அதன் பின் பாக்யா மற்றும் எழில் இருவரும் கோபி-ராதிகா வீட்டுக்கு சென்று இனியாவை பார்க்க வேண்டும் என கூறுகிறார்கள்.
ஆனால் இனியா உள்ளேயே இருக்க கோபி மட்டும் வெளியில் வந்து மகளை காட்ட முடியாது என சொல்லி பாக்யாவை அசிங்கப்படுத்தும் வகையில் பேசுகிறார். இது நாளைய ப்ரோமோவில் காட்டப்பட்டு இருக்கிறது.
இனியா வெளியே வருவாரா இல்லையா என்பது அடுத்த எபிசோடில் பார்க்கலாம்.
Also read: ராதிகா இவ்ளோ நல்லவரா நீங்க.. நம்பவே முடியல! பாக்கியலட்சுமி ரசிகர்களே ஷாக்

படவாய்ப்புக்காக அந்த நபர் என்னை படுக்கைக்கு அழைத்தார்.. - மனம் திறந்த நயன்தாரா... - ஷாக்கான ரசிகர்கள்..! IBC Tamilnadu
