பாக்கியலட்சுமியை வீட்டை விட்டு அனுப்பிய மாமியார்! எழில் திருமணத்தால் வெடித்த பூகம்பம்
எழில் திருமணம்
வீட்டிற்காக வர்ஷினியை திருமணம் செய்துகொள்ள எழில் ஒப்புக்கொண்ட நிலையில் கடைசியில் திருமணத்தன்று மொத்த உண்மையும் பாக்யாவுக்கு தெரிய வருகிறது. அதன் பின் அவர் திருமணத்தை நிறுத்திவிடும் பாக்யா அதன் பின் அமிர்தாவுடன் தான் எழில் திருமணம் நடக்க வேண்டும் என போராடுகிறார்.
அதன் பின் எல்லோரது எதிர்ப்பை மீறி அவர் திருமணத்தை நடத்தியும் வைக்கிறார். அதனால் கோபி, அவரது அம்மா உள்ளிட்ட மொத்த பேரும் கடும் கோபத்துடன் அங்கிருந்து செல்கின்றனர்.
வீட்டை விட்டு அனுப்பிய மாமியார்
திருமணம் முடிந்து பாக்யா எழில் மற்றும் அமிர்தா இருவரையும் அழைத்து கொண்டு வீட்டுக்கு வருகிறார். அப்போது மாமியார் அவர்களை வாசலிலேயே நிறுத்திவிடுகின்றனர்.
பாக்யாவை வீட்டை விட்டே வெளியேறும்படி கூறிவிடுகிறார் அவர். இதனால் அதிர்ச்சியில் உறைந்து நிற்கிறார் அவர்.
5 கோடி ரூ. வாட்ச் கட்டியிருக்கும் பிரபல நடிகர்: விலையை கேட்டு வாய்பிளக்கும் ரசிகர்கள்