பாக்கியலட்சுமி சீரியல் நடிகர்களின் சம்பள விவரம்! எல்லோரை விட இவருக்கு தான் அதிகம்
பாக்கியலட்சுமி சீரியல் தான் தற்போது விஜய் டிவியின் நம்பர் 1 சீரியல். பாரதி கண்ணம்மா 2 தொடருக்கு அதிகம் வரவேற்பு இல்லாத நிலையில், தற்போது விஜய் டிவியில் பாக்கியலட்சுமி சீரியல் மட்டுமே சுமாரான ரேட்டிங் பெற்று வருகிறது.
விவாகரத்து செய்த பின்பும் கோபி மற்றும் பாக்கியலட்சுமி இருவரும் ஒரே வீட்டில் இருக்கும் நிலையில் தற்போது பல்வேறு பிரச்சனைகள் இதனால் வந்து கொண்டிருக்கிறது. இந்த காட்சிகள் தொடர்ந்து பரபரப்பாக சீரியல் ஓட காரணமாகி இருக்கிறது.
நடிகர்கள் சம்பளம்
பாக்கியலட்சுமி சீரியலில் நடித்து வரும் நடிகர் நடிகைகளின் சம்பளம் பற்றிய விவரங்களை பார்க்கலாம். சீரியலில் சமீபத்தில் எண்ட்ரி கொடுத்த நடிகர் ரஞ்சித் தான் எல்லோரையும் தற்போது அதிகம் சம்பளம் வாங்குகிறாராம்.
ஹீரோயின் பாக்கியலட்சுமியாக நடித்து வரும் சுசித்ரா ஒரு நாள் ஷூட்டிங்கிற்கு 15 ஆயிரம் ருபாய் சம்பளமாக பெறுகிறாராம்.
வில்லன் கோபி ரோலில் நடிக்கும் சதீஷுக்கு 12 ஆயிரமும், ராதிகாவாக நடிக்கும் ரேஷ்மாவுக்கு 12 ஆயிரமும் சம்பளமாக தரப்படுகிறது.
செழியன் ரோலில் நடிக்கும் விஷாலுக்கு 10 ஆயிரம் ரூபாயும், ஜெனி திவ்யா கணேஷுக்கு 10 ஆயிரமும் ஒரு நாளுக்கு தரப்படுகிறது.
செழியனுக்கு 10 ஆயிரம் மற்றும் இனியாவுக்கு 8 ஆயிரம் ரூபாய் சம்பளமாக தரப்படுகிறதாம்.
Also Read: அந்த இயக்குனருடன் காதலால் என் கெரியரே போச்சு.. விஜய் பட நடிகை குற்றச்சாட்டு

பல்லாயிரக்கணக்கான புலம்பெயர்ந்தோருக்கு பிரித்தானியாவுக்குள் அனுமதி? எதிர்க்கட்சியினர் எச்சரிக்கை News Lankasri
