நியூஇயர் ஸ்பெஷல் மொட்டை மாடியில் செம குத்தாட்டம் போட்ட பாக்கியலட்சுமி சீரியல் நடிகைகள்- வைரல் வீடியோ
பாக்கியலட்சுமி
பாக்கியலட்சுமி, ஒரு குடும்ப தலைவியின் கதை என்ற அடைமொழியுடன் ஒளிபரப்பாகி வருகிறது சீரியல்.
இப்போது கதையில் செழியனை விவாகரத்து செய்ய வக்கீல் நோட்டீஸ் ஜெனியின் பெற்றோர்கள் தனது மகளை கூட கேட்காமல் அனுப்பி வைத்துள்ளனர்.
இதனால் செழியன் வீட்டில் உள்ளவர்கள் ஜெனி வீட்டிற்கு போய் சண்டை போட அது பெரிய பிரச்சனையாக மாறிவிட்டது.
இன்று ஒளிபரப்பான எபிசோட் கடைசியில் கணேஷ் ஒருபக்கம் பாக்கியாவிற்கு போன் செய்கிறார். இதனால் அடுத்த வார கதையில் நல்ல விறுவிறுப்புடன் திருப்பங்கள் இருக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
ஆட்டம் போட்ட நடிகைகள்
இந்த நிலையில் நியூஇயர் ஸ்பெஷலாக பாக்கியலட்சுமி சீரியலின் முக்கிய நடிகைகள் ரேஷ்மா மற்றும் சுசித்ரா இருவரும் வீட்டில் மொட்டை மாடியில் ஒரு பாடலுக்கு செம குத்தாட்டம் போட்டுள்ளனர்.
அதனை ரேஷ்மா தனது இன்ஸ்டாவில் வெளியிட லைக்ஸ் குவிந்து வருகிறது.