பாக்கியாவை நேரில் சந்தித்த ராதிகா, கோபியை பற்றி கூறுகிறாரா?- பாக்கியலட்சுமி சீரியலில் இருந்து வந்த போட்டோ
பாக்கியலட்சுமி தமிழ் சின்னத்திரையில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் ஒரு தொடர். இந்த தொடரில் பெரிய திருப்பமாக ஒரு விஷயம் நடந்திருக்கிறது, அதாவது பெரிய உண்மை வெளியே வந்துள்ளது.
கோபி என்பவர் மனைவி மற்றும் காதலி என இருவருடனும் சுற்றி வந்த நிலையில் இப்போது அவரைப் பற்றிய உண்மை காதலிக்கு தெரிந்துவிட்டது. இந்த சம்பவம் எப்போது நடக்கும் என்று தான் ரசிகர்கள் இதுநாள் வரை காத்துக் கொண்டிருந்தார்கள்.
ராதிகாவிற்கு கோபி பற்றி தெரிந்துவிட்டது அடுத்து என்ன நடக்கப்போகிறது, பாக்கியாவிற்கு உண்மை தெரிய வருமா என பல கேள்விகளை ரசிகர்கள் இப்போதே கேட்க ஆரம்பித்துவிட்டார்கள்.
ராதிகா வீட்டில் பாக்கியா
இப்போது பாக்கியலட்சுமி சீரியல் செட்டில் இருந்து ஒரு புகைப்படம் வந்துள்ளது. அதில் பாக்கியா ராதிகா வீட்டிற்கு வந்திருப்பது தெரிகிறது.
ராதிகா பாக்கியாவிடம் உண்மையை கூறிவிடுவாரா அல்லது தன்னை தனது காதலர் ஏமாற்றி விட்டார் என்பதை மட்டும் ராதிகா பாக்கியாவிடம் கூறுவாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
இதோ படப்பிடிப்பு செட்டில் இருந்து வெளிவந்த புகைப்படம்,
நடிகை மீரா ஜாஸ்மினா இது, 40 வயதில் அவர் எடுத்த போட்டோ ஷுட்- செம வைரல்