பாக்கியலட்சுமி சீரியல் புகழ் பாக்கியாவா இது?- என்ன ஒரு ChangeOver, எதிர்ப்பார்ப்பில் ரசிகர்கள்
பாக்கியலட்சுமி
விஜய் தொலைக்காட்சியில் பாக்கியலட்சுமி என்ற தொடர் வீட்டுப் பெண்களின் ஆதரவோடு வெற்றிகரமாக ஓளிபரப்பாகிறது. ஸ்ரீமோயி என்ற பெங்காலி தொடரின் ரீமேக்காக ஒளிபரப்பாகும் இத்தொடர் தமிழக மக்களுக்காக சில மாற்றங்களுடன் இருக்கிறது.
சுசித்ரா என்பவர் தமிழில் படங்கள் நடித்திருந்தாலும் இந்த தொடர் மூலம் தான் தமிழகத்தில் பெரிய ரீச் பெற்றுள்ளார்.
அண்மையில் சென்னையில் புதிய வீடு வாங்கியும் இருந்தார், அந்த புகைப்படங்களை கூட நாம் பதிவு செய்தோம்.
அடுத்த டிராக்
சூடு பிடிக்க விறுவிறுப்பாக ஒளிபரப்பாகும் பாக்கியலட்சுமி தொடரில் அடுத்த டிராக்கிற்கான புகைப்படம் ஒன்று வைரலாகிறது. அதாவது பாக்கியா மற்றும் ராதிகா இருவரும் பார்லரில் இருப்பது போல இருவரும் தலைமுடி ஸ்டைலை மாற்றப்போவதாக தெரிகிறது.
இந்த புகைப்படத்தை கண்டு ரசிகர்களும் இதையே தான் கூறி வருகிறார்கள்.
சூப்பர் சிங்கர் புகழ் சாம் விஷாலின் மொத்த குடும்பத்தை பார்த்துள்ளீர்களா?- அழகிய குடும்ப புகைப்படம்