பாக்கியலட்சுமி சீரியலில் அடுத்து வரப்போகும் கதைக்களம்- என்ன தெரியுமா, புகைப்படத்துடன் இதோ
பாக்கியலட்சுமி சீரியல்
விஜய் தொலைக்காட்சியில் படு ஹிட்டாக TRP டாப்பில் ஓடிக் கொண்டிருக்கும் ஒரு தொடர் பாக்கியலட்சுமி.
ஸ்ரீமோயி என்ற பெங்காலி தொடரின் ரீமேக்காக ஒளிபரப்பாகும் பாக்கியலட்சுமி தொடரில் இப்போது கோபி-பாக்கியாவிற்கான சண்டைகள் தான் அதிகம் வருகின்றன.
அண்மையில் கேன்டீனில் பிரச்சனை ஏற்பட ராதிகா அவர்களது கான்டிராக்ட் இனி கிடையாது என கூற பாக்கியா எப்பயோ அழுது புலம்பி தனது ஆர்டரை தக்க வைத்துக் கொள்கிறார்.
இப்போது நிறைய வேலைகள் இருப்பதால் Spoken English செல்வதை நிறுத்த முடிவு செய்துள்ளார்.
அடுத்த கதைக்களம்
இடையில் பாக்கியலட்சுமி சீரியலில் இருந்து நடிகை ரித்திகா விலகிவிட அவருக்கு பதில் காற்றுக்கென்ன வேலி சீரியல் புகழ் அபி, இனி அமிர்தாவாக நடிக்க இருக்கிறார்.
தற்போது பாக்கியலட்சுமி சீரியல் படப்பிடிப்பு தளத்தில் இருந்து ஒரு புகைப்படம் வெளியாகியுள்ளது. அதில் ஜெனிக்கு சீமந்தம் நடக்கும் நிகழ்ச்சி என்பது தெரிகிறது.
எதிர்நீச்சல் சீரியல் இயக்குனர் திருச்செல்வமிடம் கதை கேட்டுள்ள ரஜினிகாந்த்- பின்பு நடந்தது என்ன?