ராதிகா கழுத்தை பிடித்து வெளியே தள்ளும் ஈஸ்வரி.. பாக்கியலட்சுமி சீரியலில் அடுத்த வாரம் நடக்கப்போவது இதுதான்
பாக்கியலட்சுமி
பாக்கியலட்சுமி சீரியல் தான் தற்போது விஜய் தொலைக்காட்சியில் டாப் சீரியலாக இருக்கிறது. ஆம், விஜய் டிவியில் மக்கள் அதிகம் விரும்பி பார்க்கும் சீரியல்களின் லிஸ்டில் நம்பர் 1 இடத்தை பாக்கியலட்சுமி சீரியல் பிடித்துள்ளது.
பாக்கியலட்சுமி சீரியலில் தற்போதைய கதையின்படி ராதிகா தனது மகள் மயுவுடன் பாக்கியாவின் வீட்டிற்கு வந்துவிட்டார். இதனால் பாக்கிய, அவருடைய மாமியார் ஈஸ்வரி, மகன்கள், மருமகள்கள் என அனைவரும் அப்செட்டில் இருக்கிறார்கள்.
எப்படியாவது ராதிகாவை வீட்டிலிருந்து அனுப்பிவிட வேண்டும் என ஈஸ்வரி பல விஷயங்களை செய்து வருகிறார்.
அடுத்த வாரம்
இந்நிலையில், அடுத்த வாரம் ஒளிபரப்பாக இருக்கும் பாக்கியலட்சுமி சீரியலில் ராதிகாவை கழுத்தை பிடித்து வீட்டை விட்டு வெளியே தள்ளி விடுகிறார் ஈஸ்வரி. இதன்பின் கோபி நடு ரோட்டில் இருக்கும் ராதிகாவை பார்த்துவிட்டு வீட்டிற்குள் அழைத்து செல்கிறார்.
அதன் பிறகு ராதிகாவின் தாய் போலீஸை அழைத்து வந்த சட்டப்படி ராதிகாவின் கணவர் கோபியின் வீட்டில் தான் ராதிகா இருக்க வேண்டும் என போலீஸ் மூலமாக சொல்ல வைத்துவிட்டார். இதனால் மீண்டும் ராதிகா வீட்டிற்குள் வர ஈஸ்வரி செம கடுப்பாகிறார்.
மீண்டும் பண பிரச்சனையில் மாட்டிய கண்ணன்! வீட்டை விட்டு துரத்தும் மூர்த்தி! Pandian Stores Update

இவர்களின் வாழ்க்கையில் வெற்றி உறுதி! இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் சிவனின் செல்ல பிள்ளைகளாம்... Manithan

பல்லாயிரக்கணக்கான புலம்பெயர்ந்தோருக்கு பிரித்தானியாவுக்குள் அனுமதி? எதிர்க்கட்சியினர் எச்சரிக்கை News Lankasri
