பாக்கியலட்சுமி சீரியலில் எழில்-வர்ஷினி திருமணத்தை நிறுத்தப்போவதே இவரா?- அதிரடி திருப்பங்கள்
பாக்கியலட்சுமி
விஜய் தொலைக்காட்சியின் ஹிட் தொடராக ஒளிபரப்பாகி வருகிறது பாக்கியலட்சுமி. இந்த தொடரில் பாக்கியா தனியாக தனது குடும்பத்தை பார்த்து வர கோபியால் அடிக்கடி பிரச்சனையை சந்தித்து வருகிறார்.
இப்போது அவர் வீட்டை விற்க போகிறேன் என்று கூறியதால் பண கஷ்டத்திற்காக எழில் விருப்பம் இல்லாமல் வர்ஷினியை திருமணம் செய்ய ஒப்புக் கொள்கிறார். திருமண வரவேற்பு இந்த வாரம் முடிந்துவிட்டது, அடுத்த வாரம் திருமணம், அதிரடி திருப்பங்கள் ஏற்படும் என தெரிகிறது.
அதிரடி திருப்பங்கள்
எழிலுக்கு வர்ஷினியுடன் திருமணம் நடக்கப்போவதை தெரிந்துகொண்ட அமிர்தா அதிர்ச்சியில் நிற்கிறார். அவரை கண்ட எழிலின் பாட்டி அமிர்தாவை மோசமாக திட்டுகிறார். இதோடு இன்றைய எபிசோட் முடிகிறது.
இந்த நேரத்தில் தான் பாக்கியா கோபியிடம் பிடிக்காமல் என்னை திருமணம் செய்தீர்கள், வாழ்க்கை மோசமாக அமைந்தது. இப்போது என் மகன் பணத்திற்காக பிடிக்காத ஒரு திருமணத்தை செய்துகொள்ள போகிறான் என்று கூறுகிறாராம்.
இதனை யோசித்த கோபி தனது வாழ்க்கை போல் மகனுக்கு அமைய கூடாது என்று திருமணத்தை நிறுத்துகிறார் என கூறப்படுகிறது. இந்த திருப்பம் எந்த அளவிற்கு உண்மை என தெரியவில்லை.
விஜய் சேதுபதியின் மனைவியா இது, லேட்டஸ்ட்டாக யாருடைய திருமணத்திற்கு வந்துள்ளார் பாருங்க