பாரதி கண்ணம்மா சீரியலை தாக்கி சீன் வைத்த பாக்கியலட்சுமி இயக்குனர்! என்ன நடக்கிறது விஜய் டிவியில்..
பாரதி கண்ணம்மாவை கலாய்க்க தான் பாக்கியலட்சுமியில் இப்படி செய்கிறார்களா?
பாக்கியலட்சுமி vs பாரதி கண்ணம்மா
விஜய் டிவியில் தற்போது பாக்கியலட்சுமி தான் நம்பர் 1 சீரியல். இதற்கு முன்பு பாரதி கண்ணம்மா தான் முதலிடத்தில் இருந்தது, ஆனால் அதில் ஹீரோயின் மாறிய பிறகு ரேட்டிங் அதள பாதாளத்துக்கு சென்றுவிட்டது.
அந்த சீரியலை எப்போ தான் முடிப்பீங்க என ரசிகர்களே வாய்விட்டு கேட்கும் அளவுக்கு தான் பாரதி கண்ணம்மா ஓடிக்கொண்டிருக்கிறது. ஆனால் பாக்கியலட்சுமி பரபரப்புக்கு பஞ்சம் இல்லாமல் தற்போது முன்னணி தொடராக உருவெடுத்து இருக்கிறது.
ட்ரோல் செய்யும் பாக்கியலட்சுமி சீன்
பாக்கியலட்சுமி தொடரில் தற்போது கோபியிடம் இருந்து விவாகரத்து பெற்று இருக்கிறார் பாக்யா. அதன் பின் பாக்யாவை வீட்டை விட்டு வெளியில் துரத்த முயற்சிக்கிறார் கோபி.
ஆனால் பாக்யா கோபியின் பெட்டியை வெளியில் போட்டு, "நான் ஏன் வெளியே போகணும், நீங்க வெளியே போங்க" என சொல்கிறார்.
"ஆம்பளைங்க தப்பு செய்வீங்க, ஆனா பொம்பளைங்க எந்த தப்புமே செய்யாம அழுதுகிட்டே ரோட்ல நிக்கணுமா" என பாக்யா கேள்வி கேட்கிறார்.
பாரதி கண்ணம்மா தொடரில் ஹீரோ சந்தேக புத்தியால் வீட்டை விட்டு வெளியில் வந்த கண்ணம்மா தெருத்தெருவாக நடந்து சென்றது பற்றி தான் பாக்கியலட்சுமியில் குறிப்பிட்டு இருக்கிறார்கள் போல.
பாக்ஸ் ஆபிஸை அடித்து நொறுக்கிய கார்த்தியின் விருமன்.. மூன்று நாள் முடிவில் சிறந்த வரவேற்பு