கோபியை பணம் கொடுத்து வெளியே அனுப்பிய பாக்கியா- அடுத்து பாக்கியலட்சுமி தொடரில் நடக்கப்போவது என்ன?
பாக்கியலட்சுமி
விறுவிறுப்பின் உச்சமாக கதைக்களம் கொண்டு வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வருகிறது பாக்கியலட்சுமி தொடர்.
அண்மையில் இந்த தொடர் கதைக்களத்தில் கோபியிடம் சவால் விட்டது போல் ரூ. 18 லட்சத்தை அவரிடம் கொடுத்து கணவர்-மனைவி இருவரையும் வீட்டைவிட்டு வெளியேற்றியுள்ளார் பாக்கியா.
இதனால் மொத்த குடும்பமும் சந்தோஷத்தில் இருக்க கோபி அவமானத்தை தாங்க முடியாமல் மீண்டும் குடிக்கிறார்.
இன்றைய எபிசோடில் பாக்கியா ஆங்கிலம் படிக்கும் டியூசன் காட்சிகள் இடம்பெறுகிறது. அதோடு ராதிகா தனக்கு சம்பள உயர்வுடன் Promotion கிடைத்துள்ளதாக தனது குடும்பத்தினரிடம் சந்தோஷமாக கூறுகிறார்.
அடுத்து என்ன
அடுத்து என்ன நடக்கப்போகிறது என்பதை தெரிந்துகொள்ள ரசிகர்கள் ஆவலாக இருக்க பாக்கியலட்சுமி தொடர் படப்பிடிப்பு தளத்தில் இருந்து ஒரு புகைப்படம் வெளியாகியுள்ளது.
அதில் பாக்கியா குழுவினருடன் இன்னொரு கல்யாண ஆர்டர் வந்திருப்பது தெரிகிறது.
இதோ அந்த புகைப்படம்,
இந்த சிறுவயது புகைப்படத்தில் இருக்கும் விஜய் டிவி சீரியல் நாயகி யார் தெரியுமா?- அட இவரா?