உண்மையை போட்டுடைத்த தாத்தா.. பாக்கியலட்சுமி வீட்டில் வெடித்த பூகம்பம்
விஜய் டிவியின் பாக்கியலட்சுமி தொடரில் தற்போது விறுவிறுப்பான சம்பவங்கள் நடைபெற்று வருகிறது. கோபி தன் குடும்பத்துக்கு தெரியாமல் ராதிகா உடன் தொடர்பில் இருந்து வரும் நிலையில், அவரது முகத்திரை தற்போது கிழிய தொடங்கி இருக்கிறது.
இன்றைய எபிசோடில் ராதிகாவின் முன்னாள் கணவர் ராஜேஷ் வந்து தன் மகளை கொடுத்துவிடும்படி ராதிகாவிடம் பிரச்சனை செய்கிறார். அதை பார்த்த ராதிகாவின் சகோதரர் மற்றும் அம்மா இருவரும் அட்வைஸ் கூறுகின்றனர். கோபியை நீ திருமணம் செய்து கொண்டால் தான் இந்த பிரச்சனைகளுக்கு எல்லாம் தீர்வு கிடைக்கும் என கூறுகின்றனர்.
கோபி வீட்டில் ராஜேஷ் கத்திவிட்டு சென்ற விஷயங்களால் பூகம்பம் வெடிக்கிறது. பாட்டி எழிலை பிடித்து என்ன மறைக்கிறீர்கள் என கேட்கிறார், ஆனால் எழில் உண்மையை சொல்ல தயங்குகிறார். ஆனால் அப்போது கோபமாக தாத்தா உண்மையை போட்டு உடைக்கிறார்.
கோபிக்கு இன்னொரு பெண்ணுடன் தொடர்பு இருக்கிறது என தாத்தா சொன்னதை கேட்டு மொத்த குடும்பமும் அதிர்ச்சி ஆகிறது. பாட்டி உடனே கோபிக்கு போன் போட்டு வீட்டுக்கு வரும் படி கூறுகிறார்.
கோபி கடும் பயத்துடன் கார் ஒட்டி வருகிறார். இத்துடன் இன்றைய எபிசோடு நிறைவு பெறுகிறது. கோபி வீட்டுக்கு போனால் என்னவெல்லாம் நடக்கும் என்பது நாளைய எபிசோடில் தான் தெரியவரும்.
பொன்னியின் செல்வன் படத்தில் நடிகர் கார்த்தி நடித்த காட்சி ! முதல்முறையாக வெளியான புகைப்படம்..