கோபியை மாட்டிவிட அவரது அப்பா எடுத்த அதிரடி முடிவு- இந்த முறை சிக்குவாரா?
பாக்கியலட்சுமி சீரியல் விஜய்யில் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கிறது.
தொடரின் சாதனை
குடும்ப பெண்களை கவரும் வண்ணம் தொடர் இருக்க பெரிய வரவேற்பு கிடைத்து வருகிறது. அதிலும் பெண்கள் ஏகபோக வரவேற்பு கொடுக்கிறார்கள்.
எனவே பாக்கியலட்சுமி சீரியல் குழுவினர் தமிழ்நாட்டில் உள்ள பெண்களை சந்திக்க இருக்கிறார்கள். அதன் முதற்கட்டமாக மதுரை பெண்களை சீரியல் குழுவினர் சந்தித்தார்கள், அடுத்து எந்த ஊ செல்வார்கள் என்பது தெரியவில்லை.
கதைக்களம்
இப்போது தொடரில் கோபி ராதிகாவை திருமணம் செய்வதில் உறுதியாக இருக்க அவர்களுடனே எப்போதும் இருக்கிறார். வெளியே செல்வதற்கு கூட இனியா அழைத்தும் வராமல் ராதிகா-மயூவுடன் வெளியே சென்றார்.
அதைப்பார்த்த எழில் தனது தந்தையை திட்டியதோடு தாத்தாவிடம் சென்று கதறி அழுகிறார்.
இதனால் கோபம் அடைந்த கோபியின் அப்பா பாக்கியா-கோபி இருவரும் எடுத்துக் கொண்ட புகைப்படத்துடன் ராதிகா வீட்டிற்கு செல்கிறார்.
ஒருவழியாக அவர் காட்டிவிடுவாரா அல்லது இந்த முறையும் கோபி தப்பித்துவிடுவாரா என்பது தான் மக்களின் அதிக கேள்வியாக உள்ளது.
மனைவியுடன் கேக் வெட்டி கொண்டாட்டத்தில் இறங்கிய நடிகர் சிவகார்த்திகேயன்- கலக்கல் புகைப்படங்கள்