மனைவியுடன் கேக் வெட்டி கொண்டாட்டத்தில் இறங்கிய நடிகர் சிவகார்த்திகேயன்- கலக்கல் புகைப்படங்கள்
நடிகர் சிவகார்த்திகேயன் சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரை வரும் கலைஞர்களுக்கு ஒரு உதாரணமாக இருப்பவர். கடின உழைப்பின் மூலம் இப்போது மற்ற மொழி பிரபலங்களும் கவனிக்கும் அளவிற்கு வளர்ந்துள்ளார்.
சிவா திரைப்பயணம்
மெரினா படம் மூலம் நாயகனாக அறிமுகமாகி இப்போது டாக்டர் திரைப்படம் வரை 20 படங்களுக்கு மேல் நடித்திருக்கிறார். இதில் எல்லாமே செம ஹிட் தான், படத்துக்கு படம் சிவகார்த்திகேயனின் மார்க்கெட்டும் பெரிய அளவில் வளர்ந்துகொண்டே இருக்கிறது.
மிஸ்டர் லோக்கல் படத்திற்காக மட்டுமே ரூ. 15 கோடி வரை சம்பளம் கேட்டிருக்கிறார். அடுத்தடுத்து அவரது சம்பளம் எங்கேயோ செல்லும் என்கின்றனர்.
திருமணம்
ஆர்த்தி தாஸ் என்ற தனது மாமன் மகளையே திருமணம் செய்துகொண்ட செட்டில் ஆனவர் சிவகார்த்திகேயன். இவர்களுக்கு ஒரு மகள் மற்றும் மகன் இருக்கிறார்கள்.
தற்போது என்னவென்றால் இன்ஸ்டாவில் சிவகார்த்திகேயன் தனது மனைவியுடன் மாலை அணிந்துகொண்டு கேக் வெட்டிடும் புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது.
இது எதற்காக நடந்த நிகழ்ச்சி என எந்த விவரமும் தெரியவில்லை.
திடீரென ஞானவேல் ராஜா மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த நடிகர் சிவகார்த்திகேயன்- பரபரப்பு தகவல்