வீட்டில் முக்கிய நபருக்கு தெரியவந்த கோபியின் கள்ளக்காதலி- போட்டுடைத்த ராதிகா முன்னாள் கணவர்
பாக்கியலட்சுமி விஜய் தொலைக்காட்சியில் படு ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் ஒரு தொடர். ஒரு இல்லத்தரசியின் கதை என்ற அடைமொழியோடு இந்த தொடர் படு சூடாக ஓடிக் கொண்டிருக்கிறது.
சூடாக ஓடிக் கொண்டிருக்கிறது என்றால் கதையில் முக்கிய பிரச்சனை ஓடுகிறது, பாதி வெடித்துள்ளது, எப்போது மொத்தமாக வெடிக்கும் என தெரியவில்லை.
கோபி பாக்கியாவின் கணவர் என்பது ராதிகாவிற்கு தெரிந்துவிட்டது, பாக்கியாவிற்கு எப்போது தெரியவரும் என தெரியவில்லை.
அதோடு கோபி திருட்டுத்தனமாக விவாகரத்து எப்போது பெற்றார் என்பது அவரது குடும்பத்திற்கு தெரிய வர இருக்கிறது.
நாளைய புரொமோ
இப்போது நாளைய நிகழ்ச்சிக்கான புரொமோ வந்துள்ளது, அதில் ராதிகாவின் முன்னாள் கணவர் ராஜேஷ் கோபி வீட்டிற்கு சென்றுள்ளார். அதோடு எழிலிடம் உன் அப்பா செய்த வேலையை பார் என்று ராதிகா கோபியை வீட்டைவிட்டு வெளியே அனுப்பும் வீடியோவை காட்டுகிறார்.
இதைப்பார்த்த எழில் மனம் உடைந்து இதை வீட்டில் யாருக்கும் தெரியப்படுத்த வேண்டாம் என கூறுகிறார்.
இதோ அந்த புரொமோ,
திருமணத்திற்கு பின் நடிகை நயன்தாரா நடிக்கப்போகும் முதல் திரைப்படம்- யாருடன் தெரியுமா?