திருமணத்திற்கு பின் நடிகை நயன்தாரா நடிக்கப்போகும் முதல் திரைப்படம்- யாருடன் தெரியுமா?
நடிகை நயன்தாரா தென்னிந்திய சினிமா பெருமையாக கொண்டாடும் ஒரு பிரபலம். இவர் ஆரம்பத்தில் எல்லா நடிகைகளை போல காதல் காட்சி, பாடலுக்கு நடனம் ஆடிவிட்டு செல்வது என்று இருந்தார்.
பின் சொந்த வாழ்க்கையில் ஏற்பட்ட பிரச்சனையால் படங்கள் நடிக்காமல் இருந்த அவர் ஒரு குட்டி இடைவேளைக்கு பிறகு புதிய நயன்தாராவாக வலம் வந்தார். அதாவது தன் கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் உள்ள படங்களாக தேர்வு செய்து நடித்து வந்தார்.
அதில் சாதனையும் பெற்றார், அவரைப் போலவே பிற நாயகிகளும் சோலோ படங்களை தைரியமாக கமிட்டாகி நடிக்கிறார்கள்.
திருமணத்திற்கு பின்
கடந்த ஜுன் 9ம் தேதி நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவனுக்கு திருமணம் நடந்து முடிந்தது, அதன்பிறகு இருவரும் தாய்லாந்து சுற்றுலா சென்றனர். இப்போது சென்னை திரும்பியுள்ள நயன்தாரா படங்களில் நடிக்க தொடங்கியுள்ளாராம்.
இங்கே வந்த கையோடு ஷாருக்கானுடன் இணைந்து நடிக்கும் ஜவான் பட படப்பிடிப்பில் இன்று நயன்தாரா இணைந்துள்ளதாக கூறப்படுகிறது.
தமிழகத்தில் இவ்வளவு வசூலை எட்டிவிட்டதா விக்ரம்?- 25 நாட்கள் தாண்டி செம வசூல்