கோபியை விடுங்க பாக்கியலட்சுமி சீரியலில் அமிர்தாவை திருமணம் செய்துவிட்டாரா எழில்- பரபரப்பு வீடியோ
பாக்கியலட்சுமி அவர் பெயருக்கு ஏற்றார் போல் எப்போது லட்சுமியாக இருக்க போகிறார் என தெரியவில்லை. கொஞ்சம் சந்தோஷமாக இருந்தாலே உடனே ஏதாவது பிரச்சனை வந்துவிடுகிறது.
கதையில் இருக்கும் பிரச்சனைகள்
கோபியின் கள்ளக்காதல் பிரச்சனையால் அவரது அப்பா கை-கால்கள் செயல் இழந்து பேச முடியாமல் இருக்கிறார். அண்மையில எழில் கோபி இன்னொரு பெண்ணுடன் இருப்பதை கண்டு மன வேதனையில் தனது தாத்தாவிடம் வந்து அழுகிறார்.
பேரன் கண்ணீரை பார்த்த தாத்தா கோபி-பாக்கியா புகைப்படத்துடன் ராதிகா வீட்டிற்கு செல்ல அங்கு எதிர்ப்பாராத விதமாக கீழே விழுகிறார், ராதிகாவும் அந்த வீட்டை காலி செய்துவிட்டு வேறொரு வீடு செல்கிறார்.
கதையில் அடுத்து கோபி சிக்குவாரா இல்லையா என யோசிக்க வேறொரு விஷயம் நடந்துள்ளது.
காதலை வெளிப்படுத்திய எழில்
எழில் எப்போதோ தனது காதலை அமிர்தாவிடம் வெளிப்படுத்திவிட்டார். ஆனால் அவர் தான் இன்னும் எதுவும் சொல்லாமல் இருக்கிறார். அமிர்தாவுக்கு பொது இடத்தில் ஒருவர் பிரச்சனை கொடுக்க அந்த விஷயம் எழிலுக்கு தெரிய வருகிறது.
உடனே எழில் அவர்களுடன் சண்டை போட்டு தான் அமிர்தாவின் கணவர், அவர் எனது மனைவி என திடீரென கூறுகிறார். அதைக் கேட்டு அமிர்தா ஷாக் ஆனதை விட ரசிகர்கள் அதிகம் ஷாக் ஆகியுள்ளனர்.
தாய் பாலில் செய்யப்பட்ட ஒரு சூப்பரான விஷயம்- ஆல்யாவிற்கு சஞ்சீவ் கொடுத்த பரிசு