ஈஸ்வரியை வீட்டைவிட்டு அனுப்ப சண்டை போடும் ராதிகா... கோபி செய்யப்போவது என்ன, பாக்கியலட்சுமி சீரியல் அடுத்த அதிரடி
பாக்கியலட்சுமி
விறுவிறுப்பின் உச்சமாக அடுத்தடுத்து விறுவிறுப்பான கதைக்களத்துடன் விஜய் டிவியில் பாக்கியலட்சுமி தொடர் ஒளிபரப்பாகி வருகிறது.
ராதிகா-கோபி கர்ப்பமாக இருக்கும் விஷயத்தை வெடித்தவுடன் அவர்களை வீட்டைவிட்டு பாக்கியா அன் கோ அனுப்பிவிட்டார்கள்.
கோபி என்னையா வீட்டைவிட்டு அனுப்புகிறீர்கள் என செம பிளான் போட்டு வழக்கம் போல் தனது அம்மாவை ஏமாற்றி தன்னுடன் அழைத்து செல்கிறார்.
ஈஸ்வரியை பிரிந்து குடும்பம் கஷ்டப்பட்டாலும் கண்டிப்பாக திரும்பி வந்துவிடுவார் என்ற நம்பிக்கையில் உள்ளனர்.
வெடித்த சண்டை
ராதிகா வீட்டில் நுழைந்த நாள் முதல் அவருக்கும் அவரது அம்மாவிற்கும் குடைச்சல் கொடுத்துக்கொண்டே இருக்கிறார். இன்றைய எபிசோடில் ஈஸ்வரி அட்டகாசம் அதிகமாக கோபத்தில் ராதிகா கோபியிடம் சண்டை போடுகிறார்.
நாளை உங்கள் அம்மா இங்கே இருக்கக்கூடாது, அவர்களை அங்கே அனுப்புங்கள் என சண்டை போட, கோபியோ அதெல்லாம் முடியாது என கூறுகிறார். இதோடு இன்றைய எபிசோட் முடிகிறது.
கோபி ராதிகாவை சமாளிக்க முடியாமல் தனது அம்மாவை அனுப்பி வைக்கிறாரா அல்லது மனைவியுடன் சண்டையில் ஈடுபடுகிறாரா என்பதை பொறுத்திருந்து காண்போம்.