பாட்டி எடுத்த முடிவு ! போதையில் இருந்து எழுந்த கோபியே ஷாக்..! பாக்யலட்சுமியில் இன்று
பாக்கியலட்சுமி
பாக்கியலட்சுமி சீரியலில் கோபி குடித்துவிட்டு ரோட்டில் தள்ளாடியதை பார்த்துவிட்டு மகன் செழியன் அவரை பாக்யாவின் வீட்டுக்கு அழைத்து கொண்டுவந்துவிடுகிறார். கோபி இருக்கும் நிலையை பார்த்து அவரது அம்மா ஒரு முடிவை எடுக்கிறார்.
கோபி இனிமேல் இங்கே தான் இருக்க போகிறான், அவனை திருத்த வேண்டிய கடமை எனக்கு இருக்கிறது என கூறுகிறார். இதை கேட்டு ஷாக் ஆகும் பாக்யா மற்றும் எழில் இருவரும் 'அப்போ வீட்டை விட்டு எங்களை போக சொல்றீங்களா' என கேட்கின்றனர்.
அவனும் இருக்கட்டும், நீங்களும் இருங்க என பாட்டி கூற, அதெப்படி முடியும் என அவர்கள் கோபத்தில் கேட்கின்றனர்.
அதன் பின் கோபியிடம் பாட்டி அந்த விஷயத்தை கூற அவரும் ஷாக் ஆகிறார்.
ராதிகாவை தூண்டிவிடும் அம்மா
மறுபுறம் கோபி வீட்டுக்கு வரவில்லை என ராதிகா வீட்டில் கோபத்துடன் இருக்கிறார். அப்போது அவரது அம்மா ஒரு ஐடியா கொடுக்கிறார். "உன் உரிமையை ஏன் விட்டுக்கொடுக்கிறாய். உன் கழுத்தில் கோபி கட்டிய தாலி இருக்கு தானே. நீயும் அவரது வீட்டுக்கு சென்று இரு' என கூற, உடனே ராதிகாவும் அதற்கு ஒப்புக்கொள்கிறார்.
ராதிகா மகள் மயூவை தானே பார்த்துக்கொள்வதாகவும் அவர் கூறிவிடுகிறார். அதனால் ராதிகா தூக்கிக்கொண்டு கிளம்புகிறார். அவர் அங்கு போனால் என்ன நடக்கும் என்பதை நாளை பார்க்கலாம்.
பதான் திரைப்படத்திற்காக மட்டுமே நடிகர் ஷாருக்கான் இத்தனை கோடி சம்பளம் வாங்கினாரா?