சவால் விட்ட பாக்யா.. கோபியின் வில்லி மாமியார் போட்ட திட்டம்! பாக்கியலட்சுமியில் இன்று
பாக்கியலட்சுமி தொடரில் வழக்கம்போல ராதிகாவுக்கும் கோபியின் அம்மாவுக்கும் சண்டை நடந்த நிலையில், ராதிகா கோபத்தில் கோபியின் அம்மாவை வீட்டை விட்டு வெளியில் செல்லும்படி கூறுகிறார். அதை கேட்டு அவர் கடும் அதிர்ச்சி ஆகிறார்.
அதன் பின் வீட்டுக்கு வரும் கோபியிடம் 'என் அம்மா, அண்ணனை சண்டை போட்டு அனுப்பிட்டாங்க' என ராதிகா சொல்கிறார். ஆனால் அவர் அம்மாவை மரியாதையை குறைவாக பேசி வெளியே போக சொன்னது பற்றி நியாயம் கேட்கிறார் பாக்யா.
அப்போது சண்டை பெரிதாக பாக்யா கோபத்தில் ஒரு சவால் விடுகிறார். வீட்டிற்காக தர வேண்டிய 18 லட்சம் பணத்தை கொடுத்துவிட்டால் உடனே வீட்டை விட்டு போறீங்களா என கேட்கிறார். கோபி மேலும் ஏளனமாக பேச, அந்த பணத்தை ஒரே மாதத்தில் தந்துவிடுவதாக சவால் விடுகிறார் பாக்யா.
வில்லி மாமியார்
இந்த விஷயத்தை பற்றி ராதிகா அவரது அம்மாவிடம் கூறுகிறார். அதற்கு அவர் 'ஒரு மாசத்தில் பாக்யா 18 லட்சம் எல்லாம் கொடுக்க முடியாது. அப்போ அவ வெளியே போய் தான் ஆகணும். அவளோட அந்த மொத்த கும்பலும் போய்டும், அதன் பின் நீ கோபியோட அந்த வீட்டில் இருக்கலாம்' என வில்லத்தனமாக ஒரு ஐடியா கொடுக்கிறார்.
பாக்யா பணத்தை ஏற்பாடு செய்ய முயற்சித்தால் அதை கெடுக்க ராதிகாவின் அம்மா நிச்சயம் ஏதாவது சிக்கல்கள் இனி கொண்டு வரலாம். அப்படி தான் கதை நகரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பிரபல நடிகரின் மகனை திருமணம் செய்யப்போகும் அர்ஜுன் மகள்.. அவர் யார் தெரியுமா?