பாக்கியலட்சுமி சீரியல் ஜெனிக்கு பிறக்கும் குழந்தை! அடுத்து இப்படி ஒரு சிக்கலா
விஜய் டிவியின் டாப் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி. அடுத்து இந்த சீரியலில் வர இருக்கும் விஷயம் பற்றி ஒரு தகவல் வெளியாகி இருக்கிறது.
பாக்கியலட்சுமி
பாக்யாவின் மருமகள் ஜெனி கர்ப்பமாக இருக்கும் நிலையில் அவரது வளைகாப்பு காட்சிகள் தான் தற்போது ஒளிபரப்பாகி வருகிறது. வளைகாப்பில் கோபியும் - ராதிகாவும் வந்து நிற்பது அனைவருக்கும் கோபத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
இது எல்லாம் ஒரு பக்கம் இருக்க தற்போது ஜெனியாக நடித்து வரும் திவ்யா கணேஷ் அளித்து இருக்கும் பேட்டியில் பல சுவாரஸ்ய விஷயங்களை தெரிவித்து இருக்கிறார்.
குழந்தை பிறந்த பின் பிரச்சனை
ஜெனிக்கு குழந்தை பிறந்த பிறகு ஒரு பெரிய பிரச்சனை வரும், குழந்தைக்கு இந்து பெயர் வைப்பதா அல்லது கிறிஸ்தவ பெயர் வைப்பதா என தான் பிரச்சனை வருமாம்.
இறுதியில் என்ன பெயர் வைப்பார்கள் என சீரியலை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
அடுத்த வார ப்ரொமோ
மேலும் தற்போது அடுத்த வார ப்ரோமோ ஒன்றும் வெளிவந்து இருக்கிறது. அதில் ராதிகா பியூட்டி பார்லரில் இருக்கும்போது பாக்யா மற்றும் ஜெனி அங்கு செல்கிறார்கள்.
அது தெரியாமல் ராதிகா தனது திருமண வாழ்க்கையில் இருக்கும் சோகத்தை பற்றி அங்கு வேலை செய்யும் பெண்ணிடம் தெரிவிக்கிறார்.
அதை எல்லாம் பாக்யாவும் கேட்டுவிடுகிறார். அதன் பின் பாக்யா செம ஸ்டைலாக பார்லரில் இருந்து வருவதும் ப்ரொமோவில் காட்டப்பட்டு இருக்கிறது.
நடிகை ராதிகா சரத்குமாரின் பேரனை பார்த்துள்ளீர்களா.. மிகவும் அழகிய புகைப்படம்