பிக் பாஸ் நடிகருக்கு மனைவியாக நடித்துள்ள பாக்கியலட்சுமி சீரியல் நடிகை சுசித்ரா.. எந்த படத்தில் தெரியுமா
சுசித்ரா
பாக்கியலட்சுமி சீரியல் தற்போது விஜய் டிவியில் சூப்பர்ஹிட்டாக ஓடிக்கொண்டிருக்கிறது.
இதில் கதாநாயகியாக நடித்து வருபவர் தான் நடிகை சுசித்ரா ஷெட்டி. இவர் கன்னடத்தில் ஒளிபரப்பான பல சீரியல்களில் நடித்துள்ளார்.
மேலும் தற்போது பாக்கியலட்சுமி சீரியல் மூலம் தமிழக மக்கள் நெஞ்சங்களில் இடம்பிடித்துள்ளார்.
வெள்ளித்திரையில் சுசித்ரா
இந்நிலையில், இவர் உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் வெளிவந்த நிமிர் எனும் திரைப்படத்தில் நடித்துள்ளார்.
ஆம். பிரியதர்ஷன் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடித்து வெளிவந்த திரைப்படம் நிமிர். இப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் இமான் அண்ணாச்சி நடித்திருந்தார்.
இவருக்கு மனைவியாக பாக்கியலட்சுமி சுசித்ரா நடித்துள்ளார். அந்த காட்சி வீடியோ கூட தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.
இதோ அந்த வீடியோ..
இமான் அண்ணாச்சி பிக் பாஸ் 5ல் போட்டியாளராக கலந்துகொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஷங்கர் - ராம் சரண் படத்தின் டைட்டில் இதுதான்! அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. செம மாஸா இருக்கே