வீட்டில் முக்கிய நபரிடம் விவாகரத்து குறித்து பேசும் கோபி, அவரின் ஷாக்கிங் பதில்- பரபரப்பு எபிசோடு
பாக்கியலட்சுமி ஒரு குடும்ப தலைவி என்னவெல்லாம் கஷ்டப்படுகிறாள் என்பதை அப்படியே நம் கண்முன் கொண்டு வருகிறது. பாக்கியா என்ற கதாபாத்திரத்தை தமிழகத்தில் உள்ள குடும்ப தலைவிகள் கொண்டாட ஆரம்பித்துவிட்டார்கள்.
இன்றைய எபிசோட் அதிரடி
இன்றைய எபிசோடில் கோபி, இனியா, பாக்கியா 3 பேரும் அவரது பள்ளிக்கு சென்று 11ம் வகுப்பிற்கு பணம் கட்டுகின்றனர். அப்போது பாக்கியா இனியா தோழிகளிடம் சில தெரியாத கேள்விகளை கேட்கிறார். இதனால் கோபம் அடைந்த இனியா அம்மாவிற்கு எதுவும் தெரியவில்லை என தனத தந்தையிடம் கூறுகிறார்.
உடனே கோபி இனியாவை சமாதானப்படுத்திவிட்டு பாக்கியாவை வீட்டிற்கு அனுப்பி வைத்துவிட்டு இருவரும் வெளியே சாப்பிட செல்கிறார்கள்.
அப்போது கோபி அம்மாவை விவாகரத்து செய்துவிட்டால் என்ன செய்வாய், யாருடன் இருப்பாய் என இனியாவிடம் கேட்கிறார்.
முதலில் அவர் கூறியதை கேட்டு அதிர்ச்சியடைந்த இனியா பின் நான் உங்களுட்ன் தான் எப்போதும் இருப்பேன் என கூற கோபி கொஞ்சம் சமாளித்து இதை நான் சும்மா கேட்டேன் என்கிறார்.
கோபியின் அடுத்தகட்டம்
இனியா சொன்னதை கேட்டு சந்தோஷத்தில் இருக்கும் கோபி அடுத்தகட்டமாக என்ன செய்வார் என பெரிய கேள்வி எழும்புகிறது. அதோடு எழிலும் அமிர்தாவிடம் தனது காதலை தெளிவாக உறுதிப்படுத்தியிருக்கிறார்.
பாரதி கண்ணம்மா சீரியல் புகழ் பரீனாவா இது, மேக்கப் இல்லாமல் எப்படி உள்ளார் பாருங்க- லேட்டஸ்ட் க்ளிக்