தமிழகத்தில் முக்கிய இடத்திற்கு செல்லும் பாக்கியலட்சுமி சீரியல் குழு- யாரெல்லாம், எதற்காக பாருங்க
பாக்கியலட்சுமி இது ஒரு குடும்ப தலைவியின் கதை என்ற அடைமொழியோடு ஒளிபரப்பாகும் ஒரு தொடர். பாக்கியா என்ற பெண்மணி தனது குடும்பத்திற்காக எவ்வளவு கஷ்டப்படுகிறார் என்பதை நோக்கியே கதை பயணிக்கிறது.
சீரியலில் தற்போதைய கதைக்களம்
கோபி தனது மனைவியை ஏமாற்றி விவாகரத்திற்கு கடிதம் வாங்கிவிட்ட சந்தோஷத்தில் உள்ளார். அண்மையில் ராதிகா வீட்டிற்கு சென்றிருந்த கோபி பாக்கியாவிடம் சிக்கியிருப்பார்.
ஆனால் அப்போது கேடிதனம் செய்து தப்பித்துவிட்டார், அந்த நேரம் செல்வி மற்றும் பாக்கியா ராதிகா வீட்டின் முன் கோபி கார் இருப்பதை கண்டு கொஞ்சம் சந்தேகத்தில் தான் உள்ளனர்.
அடுத்து என்ன நடக்கும், எப்போது கோபி சிக்குவார் என்று தான் ரசிகர்கள் எதிர்ப்பார்க்கிறார்கள்.
மதுரையில் பாக்கியலட்சுமி குழு
சீரியல் ஒருபக்கம் ஹிட்டாக ஓட இன்னொரு பக்கம் சீரியல் குழுவினர் தமிழ்நாட்டில உள்ள பெண்களை நேரில் சந்திக்க முடிவு செய்துள்ளார்கள். அதன்படி நாளை 18ம் தேதி மதுரையில் நிகழ்ச்சியில் கலந்துகொள்கிறார்கள் பிரபலங்கள்.
அறந்தாங்க நிஷா மற்றும் பாக்கியலட்சுமி சீரியல் புகழ் எழில் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க பாக்கியா, ஜெனிபர் போன்ற பிரபலங்கள் பங்குபெறுகிறார்களாம்.
இதோ அந்நிகழ்ச்சியின் முழு விவர புகைப்படம்,
குறைந்துகொண்டே வரும் சன் டிவி டிஆர்பி ரேட்டிங்- அதிலும் விஜய் டிவி நிலைமை இதுவா?