குறைந்துகொண்டே வரும் சன் டிவி டிஆர்பி ரேட்டிங்- அதிலும் விஜய் டிவி நிலைமை இதுவா?
தமிழ்கத்தில் டாப் சேனல்கள் என்றால் அது விஜய் மற்றும் சன் தான். இந்த தொலைக்காட்சிகளை வீழ்த்த இனி மந்திரம் போட்டு மற்ற சேனல்கள் வளர்ந்தால் தான் உண்டு.
TRP விவரம்
படங்களை பாக்ஸ் ஆபிஸ் வைத்து டாப் படங்கள் கூறுவது போல் தொலைக்காட்சிகளில் TRP வைத்து டாப் சேனல்கள் கூறுவது வழக்கம். அப்படி ஒவ்வொரு வாரமும் Barc என்ற நிறுவனம் தொலைக்காட்சிகளின் TRP விவரங்களை வெளியிடுவது வழக்கம்.
TRPயில் டாப்பில் வர எல்லா தொலைக்காட்சிகளிலும் போட்டி நிலவி வந்தாலும் சுத்தமாக எதுவும் ஏறுவது இல்லை. வர வர பார்வையாளர்களின் எண்ணிக்கை தான் குறைந்து கொண்டே வருகிறது.
இரண்டு வார தொலைக்காட்சிகளின் விவரம்
இந்த வார டாப்பில் இருக்கும் தொலைக்காட்சி சன் (2199), அதற்கு அடுத்து விஜய் (1514), ஜீ தமிழ் (788), கேடிவி (672) மற்றும் விஜய் சூப்பர் (391) உள்ளது.
ஆனால் கடந்த வாரம் சன் டிவி டிஆர்பி (2295) என்றும் விஜய்யின் டிஆர்பி (1488) என்றும் இருந்துள்ளது. சிறு டிஆர்பி குறைவு என்றாலும் ஒவ்வொரு வாரமும் இதேபோல் தான் குறைந்து வருகிறது.
ஆட்டோவில் லூட்டி அடித்த பாக்கியா- உடன் யாரு இருக்கா பாருங்க, ஜாலியான வீடியோ