பாக்கியலட்சுமி சீரியல் பாக்கியா ரசிகர்களிடம் இவ்வளவு பிரபலம் ஆகவிட்டாரா?- செம ரிப்போர்ட்
பாக்கியலட்சுமி தமிழக மக்களின் வீட்டில் நடக்கும் பிரச்சனைகளை ஒரு கதையாக காட்டி வருகிற தொடர் என்றே கூறலாம். ஏனெனில் இதில் பேசப்படும் விஷயம் அனைத்தும் மக்களின் வாழ்க்கையில் நடந்து வருகிறது.
சீரியலுக்கு கிடைத்த வரவேற்பு
நாளுக்கு நாள் பாக்கியா வேடம் வீட்டில் முடங்கிய பெண்களுக்கு ஒரு உதாரணமாக காட்டப்பட்டு வருகிறது. குடும்பத்தை பார்த்துக் கொண்டாலும் தனக்கு என்று ஒரு விஷயம் இருக்க வேண்டும், யாருக்கு சளைத்தவர் நாமும் இல்லை என்பதை காட்டுகிறது.
தொடரின் கதையில் பாக்கியாவின் கணவர் கோபி எப்போது வீட்டில் சிக்குவார், முக்கியமாக ராதிகாவிடம் எப்போது மாட்டுவார் என தான் ரசிகர்கள் எதிர்ப்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கிறார்கள்.
அதிரடி புரொமோ
இந்த வாரத்திற்கான சீரியலின் புரொமோ வந்துள்ளது. அதில் செழியன் தனக்கு திருமணம் செய்ததே பிடிக்கவில்லை, விவாகரத்து செய்யலாமா என்று தோன்றுவதாக கூறுகிறார். இதனால் கோபம் அடைந்த பாக்கியா தனது மகனை பளார் என அடித்து திட்டுகிறார்.
அதனைப் பார்த்த கோபி அதிர்ச்சியில் நிற்கிறார்.
Ormax கணிப்பு
Barc இந்தியா எப்படி சீரியல்களின் TRP விவரத்தை வெளியிடுகிறதோ அப்படி இந்த Ormax சின்னத்திரையில் கலக்கும் தொடர்களின் கதாபாத்திரம், மற்ற நிகழ்ச்சிகளால் பிரபலமானவர்களின் விவரத்தை வெளியிடும்.
அந்த வகையில் கடந்த வாரத்தின் படி பாக்கியலட்சுமி தொடரின் முக்கிய வேடமான பாக்கியா இரண்டாவது இடம் பிடித்துள்ளார்.
கையில் மதுவுடன் குத்தட்டம் போட்ட நடிகை அமலா பால்? வெளிவந்த வீடியோ