நடுரோட்டில் சண்டை, போலீசில் சிக்க வைத்த பாக்யா.. இது தேவையா கோபி?
பாக்யா மற்றும் பழனிச்சாமி இருவரும் தொடர்ந்து நெருங்கி பழகி வருவது கோபிக்கு சுத்தமாக பிடிக்கவில்லை. இந்த நேரத்தில் இங்கிலிஷ் கிளாசில் பாக்யாவுக்கு பழனிச்சாமி நேரில் ப்ரொபோஸ் செய்வதை கோபி பார்த்து கடும் அதிர்ச்சி ஆகிறார்.
பழனிச்சாமி வெளியில் வரும்போது அவரிடம் கோபி சண்டை போடுகிறார். பாக்யா இன்னும் கொஞ்ச நாளில் பாட்டி ஆக போகிறார், இந்த நேரத்தில் அவளுக்கு ப்ரோபோசல் செய்றீங்களே வெக்கமா இல்லையா என கோபி கேட்கிறார்.
அது வெறும் டாஸ்க் தான் என பழனிசாமி கூறினாலும் அதை கோபி கேட்காமல் சண்டைபோட்டுவிட்டு கிளம்புகிறார்.
போலீசில் மாட்டிவிட்ட பாக்யா
அதன் பின் பாக்யா ரோட்டில் செல்லும்போது அவரது வண்டியை மறித்து காரை நிறுத்திவிட்டு சண்டை போடுகிறார் கோபி. பழனிச்சாமி உடன் பழகுவது பற்றி கோபி பேச பாக்யா அவருக்கு கோபமாக பதிலடி கொடுக்கிறார்.
சண்டையை பார்க்க ஒரு கூட்டமும் கூடி விடுகிறது. அந்த நேரத்தில் போலீஸ் அந்த இடத்திற்கு வந்து விசாரிக்கிறது.
பாக்யா தன்னுடைய wife என கோபி போலீஸிடம் கூற, அவர் யாரென்றே தெரியாது என பாக்யா கூறிவிடுகிறார். இதனால் போலீஸ் அவரை அனுப்பிவிட்டு கோபியிடம் விசாரணை நடத்துகின்றனர். அதன் பின் கோபியை எச்சரித்து அனுப்புகின்றனர்.
இளம் சீரியல் நடிகை ஸ்ருதியின் கணவர் மாரடைப்பால் மரணம்- திருமணம் ஆகி 1 வருடம் தானா