ரீ- ரிலீசில் புதிய சாதனை படைத்த ரஜினி - ஒரே வாரத்தில் இத்தனை கோடியா
சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் 2002 ஆம் ஆண்டு வெளியானது பாபா படம். இப்படத்திற்கு அவரே திரைக்கதை எழுதி படத்தை தயாரித்தும் இருந்தார்.
பாட்ஷா, அண்ணாமலை போன்ற வெற்றி படங்களை கொடுத்த சுரேஷ் கிருஷ்ணா பாபா படத்தையும் இயக்கியிருந்தார். நல்ல எதிர்பார்ப்புடன் வெளியான பாபா திரைப்படத்திற்கு மோசமான விமர்சனமே வந்ததால் படம் தோல்வி அடைந்தது.

பாபா ரீ-ரிலீஸ்
சமீபத்தில் பாபா படத்தை ரீ-ரிலீஸ் செய்ய போவதாக படக்குழுவினர் அறிவித்தனர். இதைத்தொடரந்து படத்தில் நவீன தொழிநுட்பத்திற்கு ஏற்ப கொஞ்சம் கலர் கிரேடிங் செய்து மற்றும் படத்தை டிஜிட்டலில் மாற்றி கடந்த டிசம்பர் 10 ஆம் தேதி அன்று ரிலீஸ் செய்தனர். எடிட்டிங் மூலமாக படத்தின் நேரமும் குறைக்கப்பட்டு இருந்தது.
இந்நிலையில் ரீ ரிலீஸ் ஆன பாபா திரைப்படம் தற்போது வரை ரூ 6.6 கோடி வசூல் செய்தது என தகவல் வெளியாகிவுள்ளது. மேலும் ஒரே வாரத்தில் சென்னை ரோகினி தியேட்டரில் மட்டும் 10000 டிக்கெட்டுகளை விற்ற முதல் ரீ -ரிலீஸ் திரைப்படம் என்ற புதிய சாதனையை படைத்துள்ளது.

திருமணமாகி 8 வருடங்களுக்கு பின் பிரியா கர்ப்பம்.. போட்டோவுடன் அட்லீ சொன்ன ஹேப்பி நியூஸ்!