சொத்துக்களை இழந்தேன்! நடிகை ராதிகாவின் சீரியல் என்னை கிழவன் ஆக்கிவிட்டது.. நடிகர் பப்லூ பேச்சு
பப்லூ பிரித்விராஜ்
திரையுலகில் மிகவும் பிரபலமான நடிகர்களில் ஒருவர் பப்லூ என்கிற பிரித்விராஜ். வெள்ளித்திரை மற்றும் சின்னத்திரையில் கலக்கிய இவர், சமீபத்தில் விஜய் சேதுபதியுடன் இணைந்து ஏஸ் திரைப்படத்தில் நடித்திருந்தார். இப்படம் கடந்த வாரம் வெளிவந்தது. இந்த நிலையில், நடிகர் பப்லூ சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்று படுவைரலாகி வருகிறது.
அவர் கூறியதாவது "நான் சினிமாவில் 40 ஆண்டுகளாக இருக்கிறேன். எல்லாவிதமான போராட்டம், அவமானங்களையும் பார்த்துவிட்டேன். ஒரு கட்டத்திற்கு மேல் இது தேவையில்லை என்று முடிவு செய்துவிட்டேன். இதனால், மன அழுத்தத்திற்கு ஆளாகி, பணம், சொத்து, வீடு என அனைத்தையும் நான் இழந்துவிட்டேன்.
வாணி ராணி
பின் நான் என்ன செய்வது என தெரியாமல் இருந்தேன். அப்போதுதான் நண்பர் ஒருவர் மூலம் வாணி ராணி சீரியலில் ராதிகாவுக்கு ஜோடியாக நடிக்கும் வாய்ப்பு வந்தது. அதுதான் நான் செய்த மிகப்பெரிய தவறு. ஏனென்றால், நடிகை ராதிகா சினிமாவில் பல ஆண்டுகளாக இருக்கிறார். அவர், தமிழ் சினிமாவின் அவ்வையார். அவருக்கு ஜோடி என்றால் நானும் வயதானவனாகதான் இருக்க வேண்டும். அந்த சீரியல் எனக்கு கிழவன் என்கிற ஒரு பெயரை வாங்கி கொடுத்தது.
அதன்பின் நான் கண்ணான கண்ணே சீரியலில் நடித்தேன். அதிலும் ஒரு அப்பா கதாபாத்திரத்தில்தான் நடித்தேன். இதனால் பப்லூ அப்பா கதாபாத்திரத்துக்குதான் சரியானவர் என்கிற பெயர் வந்துவிட்டது.
அதை தொடர்ந்து 19 படங்கங்களில் என்னை அப்பாவாக நடிக்க அழைத்தார்கள். ஆனால், நடிக்க முடியாது என அந்த வாய்ப்புகளை மறுத்துவிட்டேன். அதன்பின், ஏஸ் படத்தில் நெகட்டிவ் ரோலில் நடிக்க அழைத்தார்கள். கதை கேட்டதும் எனக்கு பிடித்து இருந்ததால், ஓகே சொல்லிட்டேன்" என பப்லூ பேசியுள்ளார்.

சீனா, பாகிஸ்தானுக்கு பீதி தரும் செய்தி... ஒலியை விட வேகமான இந்த ஏவுகணையை சோதிக்கும் இந்தியா News Lankasri

500 Invar ஏவுகணைகளை வாங்கும் இந்தியா - பாக்., சீனாவிற்கு பீதியை கிளப்பும் உள்ளூர் தயாரிப்பு News Lankasri

வங்கக்கடலில் வலுப்பெற்ற காற்றழுத்த தாழ்வு பகுதி.., இன்று எந்தெந்த மாவட்டங்களில் கனமழை? News Lankasri

துருக்கியுடன் உறவுகளை இந்தியா துண்டித்தால்... இந்தப் பொருட்களின் விலை ராக்கெட் வேகத்தில் உயரும் News Lankasri
