ஜோதிடம் nonsense.. பப்லு பேச்சால் நிகழ்ச்சியில் இருந்தே எழுந்து சென்ற நடிகர்
ஜோதிடம், ஜாதகம் மீது ஒருசிலருக்கு நம்பிக்கை இருக்கும், ஒரு சிலருக்கு நம்பிக்கை இருக்காது. அது பற்றி இரண்டு தரப்பினரையும் அமர வைத்து சமீபத்தில் ஜீ தமிழின் தமிழா தமிழா ஷோவில் பேச வைத்து இருக்கிறார்கள்.
ஜோதிடத்திற்கு ஆதரவாக நடிகர் அனு மோகன், காதல் சந்தியா உள்ளிட்ட பலர் பேசி இருக்கின்றனர்.
ஜோதிடம் மீது நம்பிக்கை இல்லை என சொல்லி பேசிய நடிகர் பப்லு தனது மகன் ஜாதகத்தை பார்த்து அவன் சயின்டிஸ்ட் ஆவான் என ஜோதிடர் சொன்னார்கள். ஆனால் அவன் இன்னும் பேச கூட ஆரம்பிக்கவில்லை என ஆவேசமாக பேசினார்.
எழுந்து சென்ற அனு மோகன்
மேலும் காதல் சந்தியா பேசும்போது தனக்கு பட வாய்ப்புகள் இல்லாத போது, ஜோதிடராக இருக்கும் நண்பர் என்னை திருத்தணிக்கு போக சொன்னார். அதன் பிறகு ஸ்டூடியோ வைத்து நன்றாக இருக்கிறேன் என கூறினார்.
அதற்கு காரணம் உங்கள் மூளை உழைப்பு, திருத்தணி முருகன் அல்ல என பப்லு பதில் கொடுத்தார். அதன் பின் நடிகர் அனு மோகன் பேசும்போது பப்லு உடன் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
அவர் பேசுவது நான்சென்ஸ் என பப்லு கத்த, அனு மோகன் ஷோவில் இருந்தே எழுந்து சென்றுவிட்டார்.

மறுமணத்தை மறுத்த பாக்கியா- அசிங்கப்பட்டு வெளியேறிய ஈஸ்வரி.. பதில் கேள்வி எழுப்பும் குடும்பத்தினர் Manithan
