ஹீரோயினாக என்ட்ரி கொடுக்கும் பேபி சாரா.. அதுவும் இவருடைய படத்தில்
பேபி சாரா
ஏ.எல். விஜய் இயக்கத்தில் கடந்த 2011ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் தெய்வத்திருமகள். இப்படத்தில் விக்ரமின் மகளாக பேபி சாரா நடித்திருந்தார்.

இவர் ஏற்று நடித்த நிலா கதாபாத்திரத்தை இன்று வரை யாராலும் மறக்கவே முடியாது. அந்த அளவிற்கு ரசிகர்கள் மத்தியில் தாக்கத்தை ஏற்படுத்தியது.
இதன்பின் சைவம் படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்த பேபி சாரா, பொன்னியின் செல்வன் படத்தின் மூலம் இளம் வயது பெண்ணாக நடித்து ரசிகர்கள் மனதில் இடத்தை பிடித்துவிட்டார்.

ஹீரோயினாக என்ட்ரி
இந்நிலையில், அடுத்ததாக தமிழில் கதாநாயகியாக நடிகைசாரா என்டரி கொடுக்க போகிறாராம். இவரை குழந்தை நட்சத்திரமாக அறிமுகம் செய்த இயக்குனர் விஜய் தான் கதாநாயகியாகவும் இவரை அறிமுகம் செய்ய போகிறாராம்.

இதுகுறித்து இயக்குனர் விஜய் பேசுகையில் "பொன்னியின் செல்வன் 2 படத்தில் மணிரத்னம் சாராவை தெய்வீக அழகுடன் சித்தரித்து காட்டிவிட்டார். இனி சாரா தைரியமாக ஹீரோயினாக நடிக்கலாம். அவரை நான் 2025ஆம் ஆண்டு தமிழில் கதாநாயகியாக அறிமுகப்படுத்த இருக்கிறேன்" என கூறியுள்ளார்.
10 நாட்களில் பாக்ஸ் ஆபிஸை அடித்து நொறுக்கிய மாவீரன் வசூல்.. இதுவரை எவ்வளவு தெரியுமா
325 ஓட்டங்கள் குவித்தும் இறுதிப்போட்டியில் பாகிஸ்தானிடம் தோல்வி: இலங்கை கேப்டன் கூறிய காரணம் News Lankasri
லொட்டரியில் வென்ற 1 மில்லியன் பவுண்டு - அண்டை வீட்டாரின் கனவை நிறைவேற்றிய பிரித்தானிய பெண் News Lankasri
மூன்றல்ல... இரண்டு வாரங்களுக்கான பொருட்களைச் சேமிக்குமாறு பிரித்தானியர்களுக்கு அறிவுறுத்தல் News Lankasri