Bad Girl திரை விமர்சனம்
தமிழ் சினிமாவில் எப்போதாவது தைரியமான சில முயற்சிகள் எட்டி பார்க்கும். அந்த வகையில் வெற்றிமாறன் தயாரிப்பில், வர்ஷா இயக்கத்தில் பல சர்ச்சைகளை தாண்டி இன்று வெளிவந்துள்ள பேட் கேர்ள் எப்படி இருக்கிறது என்று பார்ப்போம்.
கதைக்களம்
ரம்யா படிப்பு வரவில்லை, பள்ளி பருவத்திலேயே தன் பள்ளியில் படிக்கும் ஒரு மாணவனுடன் காதல், ஆரம்பத்தில் நன்றாக சென்றாலும், இது பெற்றோர்களுக்கு தெரிந்து வழக்கம் போல் காதலுக்கு முட்டுக்கட்டை வருகிறது.
அம்மா, ரம்யாவை புதிய ஸ்கூலில் சேர்க்க, அங்கு அவர் முதல் நாள் செல்லும் போதே இந்த ஸ்கூல் வரைக்கு தான் உன் பேச்சை எல்லாம் கேட்பேன், கல்லூரியில் என் இஷ்டம் எனக்கு பிடித்ததை செய்வேன், உனக்கு பிடிக்காததையும் செய்வேன் என்று செல்கிறார்.
அதற்கு தகுந்தது போலவே அங்கு ஒரு பையனுடன் கட்டில் வரை அவர்கள் உறவு இருக்க அந்த பையனோ சீனியர், கல்லூரி முடிந்து ரம்யாவை கழட்டி விட பார்க்கிறான்.
இதை அறியாத ரம்யா அவனிடம் வழிந்து வழிந்து பேச ஒரு கட்டத்தில் மருத்துவமனையில் அட்மிட் ஆகும் நிலைக்கு செல்ல, பிறகு இருவருக்கும் கடும் மோதல் வர, ரம்யா தன் காதலை அதுவும் சரியான காதலை கண்டுப்பிடித்தாளா என்பதே மீதிக்கதை.
படத்தை பற்றிய அலசல்
ஒரு பெண் சுந்ததிரமாக இந்த அடைப்பட்ட உலகத்தில் வாழ நினைக்கிறாள், அவள் எண்ணம் அவளை எங்கெங்கு கொண்டு செல்கிறது, அவளுடன் யார் யார் துணை நின்றார்கள், யார் என்ன பேசினார்கள் என்பதை இயக்குனர் வர்ஷா எந்த ஒரு சினிமாத்தனம் இல்லாமல் எடுத்துள்ளார்.
15 வயதில் காதலித்து அதை ஏற்காத பெற்றோர்கள், அதனால் அவள் எடுக்கும் முடிவு என்று தொடரும் படத்தில் இத்தகைய காலத்தில் பெண்கள் சுதந்திரத்திற்கு பெண்களே எப்படி தடையாக உள்ளார்கள் என பாட்டிகள், அம்மாக்கள் வழியாக இயக்குனர் காட்டியுள்ளார்.
ஆனால், சுதந்திரம் என்பது தலைமுறைக்கு தலைமுறை பெண்களுக்கு கொஞ்சம் கொஞ்சமாக கிடைக்கிறது, பாட்டி வீட்டில் இருந்தார், அம்மா வேலைக்கு செல்கிறார் நான் இன்று சுந்திரமான முடிவை எடுக்கிறேன், என் அடுத்த தலைமுறை இதைவிட அனைத்து சுந்ததிதத்தையும் பெற்று தரவேண்டும் என்று கதாநாயகி ரம்யாவின் வழியே காட்டியுள்ளனர்.
காதல், மோதல், பிரிவு, வலி இதெல்லாம் வரும் போகும் நாம் அடுத்தக்கட்டத்திற்கு நகந்துக்கொண்டே இருக்க வேண்டும், நமக்காக காலம் நிற்காது என்பதே ரம்யாவின் பயணம், பல காதல்களை கடக்கிறார், ஆனால், கடைசியாக அவருக்கான காதல் என்ன என்பதை கடைசியில் கொஞ்சம் உணர்கிறார்.
இப்படி பல முற்போக்கு விஷயங்களை படம் பேசினாலும் இது எல்லாருக்குமான படம் என்றால், சினிமா ரசிகர்களா நீங்கள், உலகப்படங்கள் பல பார்ப்பீர்களா என்றால் உங்களுக்கான படம் தான் இது.
மற்றப்படி நார்மல் பொழுதுப்போக்கு படத்தை விருபுவர்களுக்கு பொறுமையை சோதிக்கும் படமாகவே இது இருக்கும். டெக்னிக்கலாக ஒளிப்பதிவு மிக லைவ்-லியாக உள்ளது, அதோடு இசை அமித் திரிவேதி அவரும் சிறப்பாக செய்துள்ளார்.
க்ளாப்ஸ்
தைரியமாக இப்படி ஒரு களத்தை திரைப்படமாக காட்டிய விதம்.
ஹீரோயின் நடிப்பு.
டெக்னிக்கல் விஷயங்கள்
பல்ப்ஸ்
மிக மிக மெதுவாக ஊர்ந்து செல்லும் திரைக்கதை.