கண்ணீருடன் வீடியோ வெளியிட்ட சீரியல் நடிகை ஜெனிபர்! கலங்கிய ரசிகர்கள்
விஜய் டிவியின் பாக்கியலட்சுமி சீரியலில் ராதிகா ரோலில் முதலில் நடித்தவர் ஜெனிபர். அவர் அதற்கு பிறகு சில காரணங்களால் சீரியலில் இருந்து விலகினார். ராதிகா ரோல் நெகடிவ் ஆக மாற்றப்படுவதால் அதில் நடிக்க பிடிக்காமல் வெளியேறுவதாக அவர் கூறினார்.
அவர் கர்ப்பமாக இருந்ததும் சீரியலில் இருந்து அவர் வெளியேற முக்கிய காரணம். தற்போது பிரசவம் முடிந்து குழந்தையுடன் தனது நேரத்தை செலவிட்டு வருகிறார் ஜெனிபர். விரைவில் நடிப்பு கெரியரில் ரீ-என்ட்ரி கொடுக்க அவர் காத்திருக்கிறார்.
இன்னிலையில் தற்போது ஜெனிபர் கண்ணீருடன் இன்ஸ்டாகிராமில் ஒரு வீடியோ வெளியிட்டிருக்கிறார். அவரது அப்பா இன்று காலை காலமானார் எனவும் அந்த துயரத்தை தாங்க முடியவில்லை எனவும் அவர் கூறியிருக்கிறார்.
ரசிகர்கள் மற்றும் நண்பர்கள் பலரும் கால், மெசேஜ் என விசாரிக்கிறார்கள். அவர்கள் யாருக்கும் என்னால் பதில் கூற முடியவில்லை என தெரிவித்து கண்ணீருடன் அந்த வீடியோவில் பேசியிருக்கிறார் ஜெனிஃபர்.
டான்ஸ் மாஸ்ட்டரான அவரது அப்பாவுக்கு வயது முதிர்வு காரணமாக உடலில் சில பிரச்சனைகள் இருந்ததாகவும் பெரிய உடல் கோளாறு எதுவும் இல்லாத நிலையிலும் இன்று காலை அவர் காலமானார் என ஜெனிஃபர் தெரிவித்துள்ளார்.
வீடியோ இதோ
விஜய்யை எங்க போய் பார்ப்பீங்க? பெரம்பூர் தொகுதியில் விஜயை வெளுத்து வாங்கிய நடிகர் சத்யராஜ்! IBC Tamilnadu
ஈரான் மீது மீண்டும் குண்டு வீச்சு... அடுத்த வாரத்தில் முடிவெடுக்க இருப்பதாக ட்ரம்ப் பேச்சு News Lankasri