22 வயது நடிகை ஸ்ரீலீலா தான் வேண்டும்.. அடம்பிடித்த 63 வயது மூத்த நடிகர்
நடிகை ஸ்ரீலீலா
தெலுங்கில் சமீபத்தில் சென்சேஷனல் நாயகியாக மாறியுள்ளார் நடிகை ஸ்ரீலீலா. நடனத்தின் மூலம் ரசிகர்களின் மனதில் இடம்பிடித்த நடிகை ஸ்ரீலீலா தற்போது முன்னணி நட்சத்திரங்கள் தொடர்ந்து நடித்து வருகிறார்.
மகேஷ் பாபுவுடன் ஸ்ரீலீலா இணைந்து நடித்த குண்டூர் காரம் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. குறிப்பாக அப்படத்தில் இடம்பெற்ற பாடலில் ஸ்ரீலீலாவின் நடனம் படுவைரலானது.
கடந்த 2023ஆம் ஆண்டு தெலுங்கு சினிமாவின் மூத்த நடிகரான பாலகிருஷ்ணாவுடன் இணைந்து ஸ்ரீலீலா நடித்த திரைப்படம் தான் பகவந்த் கேசரி. இப்படத்தில் பாலகிருஷ்ணாவின் மகளாக இளம் நடிகை ஸ்ரீலீலா நடித்திருந்தார். இப்படம் தெலுங்கில் சூப்பர்ஹிட்டானது.
ஜோடியாக வேண்டும்
இந்த நிலையில், இப்படத்திற்காக நடந்த விழா ஒன்றில் பேசிய பாலகிருஷ்ணா "22 வயது ஆகும் நடிகை ஸ்ரீலீலா இப்படத்தில் எனக்கு மகளாக நடித்துள்ளார். ஆனால், படப்பிடிப்பில் என்னை மாமா மாமா என்று தான் அழைத்து வந்தார். அடுத்த படத்தில் ஸ்ரீலீலாவுடன் ஜோடி சேர்ந்து நடிக்க வேண்டும் என விரும்புகிறேன்" என பேசியிருந்தார் பாலகிருஷ்ணா.
இது சில மாதங்களுக்கு முன் நடந்த விஷயமாக இருந்தாலும் தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

சிரங்கு அரிப்புடன் திரும்பி வர விரும்பவில்லை - கும்பமேளா குறித்து பிரபல கால்பந்து வீரர்! IBC Tamilnadu

குஞ்சுகளை வாய் வழியாக பெற்றெடுக்கும் உயிரினம் எது தெரியுமா? தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க! IBC Tamilnadu
