பணம் செலுத்தாத நடிகர் ரவி மோகன்... வங்கி எடுத்த அதிரடி முடிவு
ஜெயம் ரவி
தமிழ் சினிமாவில் ஹேட்டர்ஸ் இல்லாத நடிகராக வலம் வந்தவர் ஜெயம் ரவி.
முதல் படமே மிகப்பெரிய ஹிட் கொடுக்க அப்படி பெயரையே தனது அடைமொழியாக வைத்து வந்தார். ஆனால் கடந்த வருடத்தில் இருந்து தனது வாழ்க்கையில் அதிரடி முடிவு எடுத்த ஜெயம் ரவி முதலில் தனது பெயரை ரவி மோகன் என மாற்றினார்.
பின் தனது மனைவியை விவாகரத்து செய்வதாக அறிவித்து நிறைய பேருக்கு அதிர்ச்சி கொடுத்தார்.
சமீபத்தில் பெரிய நிகழ்ச்சி ஏற்பாடு செய்து தான் தயாரிப்பாளராக களமிறங்கி இருப்பதாக அறிவித்தார்.
ஜப்தி நோட்டீஸ்
இதற்கு இடையில் ரவி மோகன் பெயர் வேறொரு விஷயத்திற்காக அடிபட்டது. அதாவது ஈசிஆரில் சொகுசு பங்களாவை வாங்கியவர் வீட்டின் வாங்கிய கடனை அடைக்காமல் இருந்துள்ளார்.
வீட்டிற்கான கடன் தொகையை செலுத்தாததால் தனியார் வங்கி நிர்வாகம் ஜப்தி நோட்டீஸ் ஒட்டியுள்ளனர்.