பொங்கி எழுந்த கண்ணம்மா! எப்போ தான் சீரியஸாக மாறும் இந்த சீரியல்?
விஜய் டிவியின் முன்னணி சீரியலாக இருந்து வந்தது பாரதி கண்ணம்மா. ஆனால் அதெல்லாம் ஒருகாலத்தில். கண்ணம்மாவாக நடித்து வந்த ரோஷ்ணி வெளியேறியபிறகு இந்த தொடருக்கு படிப்படியாக ரேட்டிங் குறைந்து, தற்போது டாப் 5 லிஸ்டில் கூட இடம்பிடிப்பதில்லை.
பாரதி கண்ணம்மா
எப்போ சார் இந்த தொடரை முடிப்பீங்க என பாரதி கண்ணம்மா ப்ரோமோ வெளிவரும் போதெல்லாம் நெட்டிசன்கள் கமெண்டில் கேட்டு வருகிறார்கள்.
தற்போது இந்த தொடரில் பாரதியின் ஹாஸ்பிடலுக்குள் தீவிரவாதிகள் புகுந்துவிடுகிறார்கள். பீஸ்ட் படத்தை காபி அடித்து இருக்கிறார் இயக்குனர் என சமூக வலைத்தளங்களில் அதிகம் ட்ரோல்களை சந்தித்து வருகிறது பாரதி கண்ணம்மா.
Also Read: பொன்னியின் செல்வனில் நடிக்க மறுத்த அமலா பால்! அவர் சொன்ன காரணத்தை பாருங்க
பொங்கி எழுந்த கண்ணம்மா
தற்போது இந்த வாரத்திற்கான ப்ரொமோ வெளிவந்து இருக்கிறது. அதில் தீவிரவாதிகளில் ஒருவன் ஹாஸ்பிடலில் பிணை கைதியாக இருக்கும் சில பெண்களை தனியாக அழைத்து சென்று சீண்டுகிறான். அப்போது கண்ணம்மா வேண்டுமென்றே அவனுடன் சென்று அவன் நெருங்கி வரும்போது அவனை குத்தி கொல்கிறார்.
இப்படி கண்ணம்மா பொங்கி எழுந்திருப்பது தான் இந்த வார பாரதி கண்ணம்மாவின் ஹைலைட்.
ப்ரோமோ இதோ
இந்த ப்ரோமோவுக்கு வந்திருக்கும் கமெண்டுகளை நீங்களே பாருங்க



மறுமணத்தை மறுத்த பாக்கியா- அசிங்கப்பட்டு வெளியேறிய ஈஸ்வரி.. பதில் கேள்வி எழுப்பும் குடும்பத்தினர் Manithan
