இது எந்த படத்தின் காபி? பாரதி கண்ணம்மா லேட்டஸ்ட் ப்ரோமோ
பாரதி கண்ணம்மா அடுத்த வார ப்ரொமோ தற்போது வெளிவந்திருக்கிறது.
ஹாஸ்பிடலில் தீவிரவாதிகள்
பாரதி கண்ணம்மா தொடரின் லேட்டஸ்ட் ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. ஏற்கனவே பாரதி நடத்திவரும் ஹாஸ்பிடலில் தீவிரவாதிகள் புகுந்துவிட்டது கடந்த வார எபிசோடுகளில் காட்டப்பட்டது.
அதை பார்த்த ரசிகர்கள் இது பீஸ்ட் பட காபி போல இருக்கிறது என விமர்சித்தனர். சீரியல் இயக்குனர்கள் சொந்தமாக யோசிக்காமல் தொடர்ந்து படங்களை காபி அடித்து வருகிறார்கள் என ட்ரோல் செய்தனர்.
அடுத்த வார ப்ரோமோ
இந்நிலையில் தற்போது அடுத்த வாரத்திற்கான ப்ரோமோ வெளிவந்திருக்கிறது. அதில் எல்லோரையும் காப்பாற்றுவதாக ஹாஸ்பிடலுக்கு வரும் பாரதியை பிடித்து தீவிரவாதி ஒரு கண்டிஷன் போடுகிறார். ஹாஸ்பிடலில் இருக்கும் அமைச்சர் உயிருடன் வேண்டும், இல்லை என்றால் எல்லோரையும் கொன்றுவிடுவேன், முதலில் உன் குடும்பத்தை தான் கொள்வேன் என கூறுகிறார்.
அதை கேட்டு அமைச்சருக்கு ஆபரேஷன் செய்ய பாரதி செல்கிறார். இந்த ப்ரோமோவை பார்த்த நெட்டிசன்கள் இது ஹாட்ஸ்டாரில் வந்த ஒரு வெப் சீரிஸ் காபி என விமர்சித்து வருகிறார்கள்.
BB ஜோடிகள் டைட்டில் வின்னர் இவர்கள்தான்: பரிசு தொகை இத்தனை லட்சமா