BB ஜோடிகள் டைட்டில் வின்னர் இவர்கள்தான்: பரிசு தொகை இத்தனை லட்சமா
பிக் பாஸ் ஜோடிகள் 2 ஷோவின் டைட்டில் ஜெயித்த ஜோடிக்கு கிடைத்த பரிசுத்தொகை எவ்வளவு தெரியுமா?
BB ஜோடிகள்
விஜய் டிவியின் பிக் பாஸ் ஷோவில் போட்டியாளர்களாக கலந்துகொண்ட பிரபலங்களை நடனம் ஆட வைத்து நடத்தப்படும் ஷோ BB ஜோடிகள். இந்த ஷோவில் போட்டியாளராக வருபவர்கள் ஜோடிகளாக பிரிந்து நடனம் ஆட வேண்டும்.
அந்த வகையில் தற்போது BB ஜோடிகள் இரண்டாம் சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. அதன் பைனல் இன்று ஒளிபரப்பானது.
பரிசுத்தொகை எவ்வளவு?
இறுதியில் டைட்டில் ஜெயிக்கப்போவது அமீர் - பாவனி ஜோடியா, இல்லை சுஜா - சிவகுமார் ஜோடியா என்கிற நிலை வந்தது. நடுவர்களாக ரம்யா கிருஷ்ணன் மற்றும் சதிஷ் இருவரும் பிக் பாஸ் ஸ்டைலில் கையை தூக்கி வெற்றியாளரை அறிவிப்பதாக சொன்னார்கள்.
இறுதியில் இருவருமே கையை தூக்கி இரண்டு ஜோடிகளுமே டைட்டில் வின்னர் என அறிவித்தனர். அதனால் அமீர் - பாவனி மற்றும் சுஜா - சுஜா இரண்டு ஜோடிகளுக்குமே வின்னர் என கேடயம் வழங்கப்பட்டது.
அவர்களுக்கு பரிசு தொகையாக 5 லட்சம் ருபாய் வழங்கப்பட்டது. அதை இரண்டாக பிரித்து ஒரு ஜோடிக்கு 2.5 லட்சம் ருபாய் கிடைக்கும்.
திவ்யபாரதி மாலத்தீவில் அப்படி ஒரு கிளாமர் உடையில் எடுத்த வீடியோ! இணையத்தில் படுவைரல்