சூர்யா படத்தை இயக்குகிறேனா.. நடிகர் பேசில் ஜோசப் Exclusive Interview
நடிகர் மற்றும் இயக்குனர் பேசில் ஜோசப் தற்போது மலையாள சினிமாவின் விஜய் சேதுபதி என எல்லோரும் சொல்லும் அளவுக்கு பாப்புலர் ஆகி வருகிறார்.
தொடர்ந்து அவர் நடிக்கும் படங்கள் தமிழ் ரசிகர்கள் மத்தியிலும் நல்ல வரவேப்பை பெற்று வருகிறது. அதற்கு ஓடிடி தான் காரணம் என சொல்கிறார் அவர்.
ஐடி வேலை to சினிமா
இன்ஜினியரிங் படித்துமுடித்துவிட்டு ஐடி நிறுவனத்தில் இரண்டு வருடங்கள் வேலை செய்து அதன் பிறகு படங்கள் மீது இருந்த ஆர்வத்தால் சினிமாவுக்குள் வந்தது எப்படி என அவர் சினிஉலகத்திற்கு அளித்த பேட்டியில் கூறி இருக்கிறார்.
நாளைய இயக்குனர் ஷோ மூலமாக கார்த்திக் சுப்புராஜ் உள்ளிட்டோர் சினிமாவுக்குள் வந்து படங்கள் இயக்கியதை பார்த்து தான் தானும் அந்த வழியை பின்பற்றி ஷார்ட் பிலிம் எடுத்து அதன்மூலம் சினிமா வாய்ப்பு பெற்றதாக அவர் கூறியுள்ளார். தன் வாழ்க்கையை மாற்றியதே அதுதான் என்றும் குறிப்பிட்டிருக்கிறார்.
சூர்யா படத்தை இயக்குகிறேனா?
நடிகர் சூர்யாவின் அடுத்த படத்தை பேசில் ஜோசப் தான் இயக்கப்போகிறார் என சமீபத்தில் ஒரு தகவல் பரவியது.
அது பற்றி கேட்டபோது "எதுவும் உறுதியாகவில்லை" என ஒரே ஒரு வார்த்தையை மட்டும் பதிலாக கூறியுள்ளார் அவர்.
அவரது முழு பேட்டி இதோ.