பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறும் இரண்டாவது போட்டியாளர்.. அதிர்ச்சியில் ரசிகர்கள்
முதல் எலிமினேஷன்
பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து முதல் போட்டியாளராக அனன்யா நேற்று வெளியேறினார். மக்களிடம் இருந்து குறைந்த வாக்குகள் பெற்ற போட்டியாளராக அனன்யா வெளியேறிய நிலையில், சில ரசிகர்கள் அவருடைய வெளியேற்றத்தை ஏற்றுக்கொள்ள முடியவில்லை என கூறி வருகிறார்கள்.
முதல் எவிக்ஷன் நடந்து முடிந்துள்ள நிலையில், ரசிகர்களுக்கு ஷாக் கொடுக்கும் விதமாக மற்றொரு போட்டியாளரும் வீட்டை விட்டு வெளியேறப்போவதாக பிக் பாஸ் இடம் முறையிட்டுள்ளார்.
அதிர்ச்சி கொடுத்த போட்டியாளார்
அவர் வேறு யாருமில்லை பவா செல்லத்துரை தான். ஆம், பவா செல்லத்துரை இனி என்னால் பிக் பாஸ் வீட்டிற்குள் இருக்க முடியாது. என்னால் இங்கு இருக்க முடியவில்லை. தெய்வசெய்து என்ன வெளியே அனுப்பிவிடுங்கள் என பிக் பாஸ் இடம் கேட்டு கொண்டுள்ளார்.
நேற்று இரவு இந்த விஷயம் நடந்த நிலையில், இரவு முழுவதும் யோசித்து விட்டு காலை உங்களுடைய இறுதி முடிவை சொல்லுங்கள் என பவா செல்லத்துரையிடம் கூறியுள்ளார். பவா செல்லத்துரை எடுக்கப்போகும் முடிவு என்ன என்பதை நாம் பொறுத்திருந்து பார்ப்போம்.
Bava requests Bigg Boss to allow him to quit the game (5/5). #BiggBossTamil7pic.twitter.com/VufLlUDM7K
— Bigg Boss Follower (@BBFollower7) October 8, 2023